ஈராக்கில் 39 இந்தியர்கள் உயிரிழந்த விவகாரத்தை திசை திருப்ப பாஜக புதுக்கதை: ராகுல்

ஈராக்கில் 39 இந்தியர்கள் உயிரிழந்த விவகாரத்தை திசை திருப்ப பாஜக புதுக்கதை தெரிவிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் வியாழக்கிழமை குற்றம்சாட்டினார்.
ஈராக்கில் 39 இந்தியர்கள் உயிரிழந்த விவகாரத்தை திசை திருப்ப பாஜக புதுக்கதை: ராகுல்

ஈராக்கில் 39 இந்தியர்கள் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் நடந்து சில வருடங்களுக்குப் பிறகு தற்போது நாடாளுமன்றத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.

மேலும், போதிய ஆதாரமின்றி ஒருவரின் உயிரிழப்பு செய்தியை தெரிவிப்பது அநாகரீகம். எனவே டிஎன்ஏ சோதனை மேற்கொள்ளப்பட்டு தற்போது உண்மை நிலவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்நிலையில், 39 இந்தியர்கள் உயிரிழந்த விவகாரத்தை திசை திருப்புவதற்கு பாஜக புதுக்கதை ஒன்றை வெளியிட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் விமரிசித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:

ஈராக்கில் 39 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால் அதை மத்திய அரசு சில வருடங்களுக்குப் பிறகு தெரிவித்தது. அப்படியென்றால் இத்தனை நாட்களாக பொய் கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் இருந்து தப்பிக்கவே தற்போது ஃபேஸ்புக் தகவல் திருட்டு தொடர்பாக கேம்ப்ரிட்ஜ் அனலிடிக்ஸ் செய்த காரியம் என்ற புதுக்கதையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. மேலும் இதில் காங்கிரஸ் கட்சியை இணைத்து குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகிறது என்றார்.

முன்னதாக, சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் உள்ளவர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு அவை அரசியல் காரணங்களுக்காக உள்ளூர் டிஜிட்டல் சேவை நிறுவனங்களிடம் அனுமதியின்றி விற்பனை செய்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் மன்னிப்பு கோரியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com