பொக்ரானில் சூப்பர்ஸானிக் பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரச் சோதனை

முதன்முறையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட கருவி பொருத்தப்பட்ட சூப்பர்ஸானிக் பிரம்மோஸ் ஏவுகணை வியாழக்கிழமை வெற்றிகரமாச் சோதிக்கப்பட்டது.
பொக்ரானில் சூப்பர்ஸானிக் பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரச் சோதனை

முதன்முறையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட கருவி பொருத்தப்பட்ட சூப்பர்ஸானிக் பிரம்மோஸ் ஏவுகணை வியாழக்கிழமை வெற்றிகரமாச் சோதிக்கப்பட்டது.

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சுகோய்-30 எம்கேஒய் ரக விமானத்தில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணை கடந்த நவம்பர் மாதம் சோதிக்கப்பட்டது. வங்கக் கடலில் இருந்த இலக்கை அந்த ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது. இதன்மூலம் இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்தது.

பிரம்மோஸ் ஏவுகணை, இந்திய ராணுவம், கடற்படை ஆகியவற்றில் ஏற்கெனவே இணைக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில், இந்திய விமானப்படை விமானத்தின் மூலமும் பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இதன்மூலம், பிரம்மோஸ் ஏவுகணையை பயன்படுத்தும் திறன் இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்கும் கிடைத்துள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தானில் உள்ள பொக்ரானில் இருந்து அதிநவீன சூப்பர்ஸானிக் பிரம்மோஸ் ஏவுகணை முதன்முறையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட கருவி பொருத்தப்பட்டு வியாழக்கிழமை வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டு தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com