ஒவ்வொரு பள்ளிக்கும் 150 சிசிடிவி கேமரா: தில்லி பட்ஜெட் கூட்டத்தொடரில் ஒதுக்கீடு

2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட் தில்லி சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதனை தில்லி நிதியமைச்சர் மணீஷ் சிசோடியா தாக்கல் செய்தார்.
ஒவ்வொரு பள்ளிக்கும் 150 சிசிடிவி கேமரா: தில்லி பட்ஜெட் கூட்டத்தொடரில் ஒதுக்கீடு

2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட் தில்லி சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதனை தில்லி நிதியமைச்சர் மணீஷ் சிசோடியா தாக்கல் செய்தார்.

கடந்த 2011-12 நிதியாண்டில் ரூ.26,402 கோடி, 2014-15 ரூ.30,940 கோடியாக இருந்த பட்ஜெட் இம்முறை ரூ.53,000 கோடிக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த பட்ஜெட்டின் ஒரு பகுதியாக ஒவ்வொரு பள்ளியிலும் 150-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது, தில்லி மாநகரம் முழுவதும் இலவச வைஃபை இணைய சேவை உள்ளிட்டவை குறித்த முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு பள்ளியிலும் 150-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவுள்ளது. இதன்மூலம் தங்கள் பிள்ளைகளின் நிலை குறித்து பெற்றோர்கள் இணையம் மூலம் கண்காணிக்க முடியும். இதற்காக தில்லி முழுவதும் உள்ள பள்ளிகளில் 1 லட்சத்து 20 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவுள்ளது. 

கடந்த 2016-ஆம் ஆண்டு துவங்கப்பட்டு கைவிடப்பட்ட இலவச வைஃபை இணைய சேவை, இம்முறை ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டு மீண்டும் வெற்றிகரமாக துவங்கப்படுகிறது. இதற்காக தில்லி முழுவதும் இலவச வைஃபை இணைப்புகள் ஏற்படுத்தும் பணி மார்ச் மாதம் துவங்கி நடைபெறுகிறது.

தில்லியில் உள்ள அங்கீகரிக்கப்படாத மக்கள் வசிப்பிடங்களின் அடிப்படை கட்டமைப்புகளை நவீன வசதிகளுடன் ஏற்படுத்த ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இவ்வாறு தில்லி நிதியமைச்சர் மணீஷ் சிசோடியா, சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கலின் போது அறிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com