வன்கொடுமை தடுப்புச் சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் உச்ச நீதிமன்ற நடவடிக்கையை எதிர்த்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தியது.
வன்கொடுமை தடுப்புச் சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

பிற்படுத்தப்பட்டோர்/ பழங்குடியினர் (எஸ்சி/எஸ்டி) வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் சில விதிமுறைகளை உச்ச நீதிமன்றம், தளர்த்தியுள்ளது. அதன்படி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களை உயரதிகாரிகளின் அனுமதி இல்லாமல் உடனடியாக கைது செய்யக் கூடாது என்று தெரிவித்துள்ளது. 

மேலும் இந்த சட்டத்தின் மூலம் நேர்மையான அதிகாரிகளும் பாதிக்கப்படுகின்றனர். இதனை அதுபோன்ற நேர்மையான அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுக்கவும், அவர்களின் பணியில் குறுக்கீடு செய்யவும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது எனவும் கருத்து வெளியிட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அங்குள்ள காந்தி சிலையின் முன்பு காங்கிரஸ் தலைவர் ராகுல் தலைமையில் திரண்ட காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். 

மேலும், தலித்துகளுக்கு உறுதுணையாக காங்கிரஸ் தலைவர் ராகுல் என்றும் இருப்பார் என்பது போன்ற வாசகங்களையும் எழுப்பினர். உச்ச நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து மத்திய அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com