2019 பொதுத் தேர்தல்: வடகிழக்கில் 21 தொகுதிகளைக் கைப்பற்ற பாஜக இலக்கு

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், வடகிழக்கு மாநிலங்களில் 21 தொகுதிகளில் வெற்றி பெறும் வகையில்,
2019 பொதுத் தேர்தல்: வடகிழக்கில் 21 தொகுதிகளைக் கைப்பற்ற பாஜக இலக்கு

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், வடகிழக்கு மாநிலங்களில் 21 தொகுதிகளில் வெற்றி பெறும் வகையில், பாஜக தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா கேட்டுக் கொண்டார்.
 அஸ்ஸாம் மாநிலத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, குவாஹாட்டியில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், அமித் ஷா பேசியதாவது:
 வடகிழக்கு மாநிலங்களில், மிúஸாரம் மாநிலத்தைத் தவிர மற்ற அனைத்து மாநில அரசுகளிலும் பாஜக அங்கம் வகிக்கிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், வடகிழக்கு மாநிலங்களில் 8 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது.
 இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், மொத்தமுள்ள 25 தொகுதிகளில் 21 இடங்களில் பாஜக வெற்றிபெற வேண்டும். அதற்கேற்ப, பாஜக தொண்டர்கள் கடுமையாக பாடுபட வேண்டும்.
 நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சியில் பின்தங்கி விட்டது. அதற்கு முந்தைய காங்கிரஸ் அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளே காரணமாகும்.
 நாடு சுதந்திரம் அடைந்தபோது, நான்காவது வளர்ச்சி அடைந்த மாநிலமாக அஸ்ஸாம் இருந்தது. ஆனால், சர்வானந்த சோனோவால் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல்வராகப் பொறுப்பேற்றபோது, வளர்ச்சிப் பட்டியலில் கடைசியில் இருந்து 4-ஆவது இடத்தில் அஸ்ஸாம் தள்ளப்பட்டிருந்தது. வடமேற்கு பகுதியைப் போலவே வடகிழக்கு மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி உறுதியளித்திருந்தார். அதன்படி, கடந்த 4 ஆண்டுகளாக, அஸ்ஸாமில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது அஸ்ஸாம் மாநிலத்துக்கு ரூ.79,741 கோடி ஒதுக்கப்பட்ட்து. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில், அந்த நிதி, ரூ.1,55,292 கோடியாக உயர்த்தப்பட்டது. வங்கதேசத்துடனான எல்லைப் பிரச்னையை தீர்த்து வைத்து, வடகிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி உதவி செய்துள்ளார்.
 கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜக தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருவதை எதிர்க்கட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை. எனவே, நாடாளுமன்றத்தில் 15 நாள்களுக்கும் மேலாக அக்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
 மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. அதை எதிர்கொள்வதற்கு பாஜக தயாராக உள்ளது என்றார் அமித் ஷா.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com