அரசியலுக்காக கூட்டணியில் இருந்து விலகல்: சந்திரபாபு நாயுடு மீது அமித் ஷா தாக்கு

"அரசியல் காரணங்களுக்காகவே, பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியுள்ளது; ஆந்திர மாநிலத்தின் நலனுக்காக அல்ல'' என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.
அரசியலுக்காக கூட்டணியில் இருந்து விலகல்: சந்திரபாபு நாயுடு மீது அமித் ஷா தாக்கு

"அரசியல் காரணங்களுக்காகவே, பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியுள்ளது; ஆந்திர மாநிலத்தின் நலனுக்காக அல்ல'' என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.
 ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது, ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சிக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று மத்தியில் ஆளும் பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி அண்மையில் வெளியேறியது.
 இந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்தி முதல்வருமான சந்திரபாபு நாயுடுவுக்கு அமித் ஷா சனிக்கிழமை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த 9 பக்க கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
 பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் வெளியேறியது சற்றும் எதிர்பாராத முடிவாகும். மேலும், அது தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவாகும். ஆந்திர மாநில நலனுக்காக இல்லாமல், முற்றிலும் அரசியல் காரணங்களுக்காக பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியிருக்கிறது.
 ஆந்திர மாநிலத்தின் வளம், வளர்ச்சி ஆகியவற்றை உறுதிசெய்வதற்காக, மத்திய அரசு மேற்கொண்ட ஒவ்வொரு முயற்சியையும் அனைவரும் அறிவர்.
 முந்தைய மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தெலுங்கு தேசம் கட்சிக்கு எத்தனை எம்.பி.க்கள் இருந்தார்கள் என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.
 ஆந்திரத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு எண்ணற்ற திட்டங்களைத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமன்றி, அந்தத் திட்டங்களுக்கு நிதியுதவியையும் மத்திய அரசு அளித்துள்ளது.
 எனவே, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டினை ஏற்க முடியாது. ஆனால், அடிப்படையின்றி, உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை சந்திரபாபு நாடு கூறுகிறார்.
 எனினும், ஆந்திர மாநிலத்தின் உண்மையான நலம்விரும்பியாகவும், உற்ற தோழனாகவும் பாஜக எப்போதும் இருக்கும்.
 ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது குறித்து விவாதித்து நடவடிக்கை எடுக்காமல், மக்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையில் சில அரசியல் கட்சிகள் நடந்துகொள்வது வருத்தமளிக்கிறது.
 அரசியல் கட்சிகள் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டுமா? அல்லது அரசியல் காரணத்துக்காக ஒருவரை ஒருவர் குறை கூற வேண்டுமா? என்பதை தெலுங்கு
 தேசம் கட்சி சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com