தெலங்கானா பள்ளிகளில் தெலுங்கு கட்டாயம்: பேரவையில் மசோதா நிறைவேறியது

தெலங்கானாவின் அனைத்து பள்ளிகளிலும் தெலுங்கு மொழி பாடத்தை கட்டாயமாக்கும் மசோதா, அம்மாநில சட்டப் பேரவையில் சனிக்கிழமை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தெலங்கானாவின் அனைத்து பள்ளிகளிலும் தெலுங்கு மொழி பாடத்தை கட்டாயமாக்கும் மசோதா, அம்மாநில சட்டப் பேரவையில் சனிக்கிழமை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
 "தெலங்கானா (பள்ளிகளில் தெலுங்கு பயிற்றுவிப்பதும், கற்பதும் கட்டாயம்) சட்டம், 2018' என்ற பெயரிலான அந்த மசோதாவுக்கு, பாஜக, தெலுங்கு தேசம், அகில இந்திய மஜ்லிஸ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அச்சட்டத்தின் சிறப்பம்சங்கள்:
 எதிர்வரும் 2018-19 நிதியாண்டிலிருந்து ஒன்றாம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை மாணவர்கள் தெலுங்கை கட்டாயமாக கற்றுக் கொள்ள வேண்டும். சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐபி அல்லது கேம்பிரிட்ஜ் வாரிய பள்ளிகளிலும் இதை அமல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த மசோதாவை தெலங்கானா பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், துணை முதல்வருமான கதியம் ஸ்ரீஹரி சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். அவர் கூறுகையில், "தற்போது 6-ஆம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயமாக கற்றுத் தரப்படுகிறது. படிப்படியாக 10-ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்படும்' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com