நரேந்திர மோடியின் மத்திய அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறது: குமாரசாமி

நரேந்திர மோடியின் மத்திய அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருவதாக குமாரசாமி வியாழக்கிழமை குற்றம்சாட்டினார்.
நரேந்திர மோடியின் மத்திய அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறது: குமாரசாமி

கர்நாடக முதல்வராக எடியூரப்பா வியாழக்கிழமை காலை 9 மணிக்கு பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் வஜுபாய் வாலா அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கர்நாடகத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கிறது. 

கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர். பெங்களூரு சட்டப் பேரவை வளாகத்தில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு முன்பாக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த மஜத தலைவர் குமாரசாமி கூறுகையில்,

எங்களுடைய எம்எல்ஏ-க்களை பாதுகாப்பது தான் எங்களது முதல் பணி. ஏனெனில் பாஜக-வும் அதன் அமைச்சர்களும் எங்களுடைய எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்குவதில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். மத்திய அரசின் இந்த போக்கை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இங்கு ஆட்சி அமைக்க பாஜக-வுக்கு எந்த பெரும்பான்மையும் இல்லை. நரேந்திர மோடியின் மத்திய அரசு அதிகாகரத்தை துஷ்பிரயோகம் செய்கிறது ஆளுநர் கூட தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருகிறார். 

இந்தியாவின் ஜனநாயகத்தை பாஜக அழித்து வரும் இந்த நிலையில், அனைத்து மாநில தலைவர்களுடனும் விரைவில் பேச்சுவார்த்தை நடத்துமாறு எனது தந்தையிடம் கோரிக்கை வைக்கிறேன். தேச நலனை பாதுகாக்க அனைவரும் இந்த தருணத்தில் ஒன்றிணைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com