ராஜீவ் காந்தி நினைவு தினம்: மிகவும் அரிய புகைப்படங்களின் தொகுப்பு

சுதந்திர இந்தியாவின் 6வது பிரதமர் ராஜீவ் காந்தி. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ள வந்த ராஜீவ் காந்தி 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.
ராஜீவ் காந்தி நினைவு தினம்: மிகவும் அரிய புகைப்படங்களின் தொகுப்பு


சுதந்திர இந்தியாவின் 6வது பிரதமர் ராஜீவ் காந்தி. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ள வந்த ராஜீவ் காந்தி 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

இன்று அவரது 27வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ராஜீவ் காந்தியை, எல்டிடிஇ அமைப்பைச் சேர்ந்த தேன்மொழி ராஜரத்தினம் என்ற பெண் புலி, தனது உடலில் கட்டிவைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து படுகொலை செய்தார்.

இலங்கையில், தனி ஈழம் கோரி விடுதலைப் புலிகள் அமைப்பு கடுமையான போரில் ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இந்திய அரசுக்கும் இடையே இருந்த உறவு 1987ல் உடைந்தது. 

1987ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி கொழும்பு சென்றிருந்தபோது, இலங்கையின் கப்பற்படை அதிகாரி விஜிதா ரஹானா, ராஜீவ் காந்தியை தாக்க முயன்றார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியுடன், பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் எல்டிடிஇ தலைவர் பிரபாகரன் சந்தித்துப் பேசிய போது.

அமைதி முறையில் தீர்வு காணும் திட்டத்துக்கு ஒப்புக் கொண்டு ஜாஃப்னாவில் ஆயுதங்களை ஒப்படைத்த எல்டிடிஇ தலைவர் பிரபாகரன் மற்றும் புலிகள் அமைப்பினர்.

முன்னாள் பிரதமர் வி.பி. சிங் மற்றும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி.

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

ராஜீவ் காந்தி படுகொலையில் ஈடுபட்ட தேன்மொழி ராஜரத்தினத்துடன் நளினி.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளி சிவராசன், பெங்களூருவில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராஜீவ் காந்தி படுகொலையை நிகழ்த்திய குற்றவாளிகள் பதுங்கியிருந்த இடம்.

ராஜீவ் காந்தி படுகொலையில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட நளினி.

படுகொலை நிகழ்த்தப்படுவதற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம்

ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி படுகொலை நிகழ்த்தப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவிடம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com