கதுவா வழக்கில் 8வது குற்றவாளிக்கு ஆதரவான சாட்சியம் பொய்: போலீஸ் கண்டுபிடித்தது எப்படி?

கதுவா பாலியல் வன்கொடுமை - கொலை சம்பவ வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி, உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்வில் தாம் கலந்து கொண்டதாக கூறியது பொய் என்பது தடயவியல் பரிசோதனை மூலம் தெரிய வந்துள்ளது.
கதுவா வழக்கில் 8வது குற்றவாளிக்கு ஆதரவான சாட்சியம் பொய்: போலீஸ் கண்டுபிடித்தது எப்படி?


ஸ்ரீநகர்: கதுவா பாலியல் வன்கொடுமை - கொலை சம்பவ வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி, உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்வில் தாம் கலந்து கொண்டதாக கூறியது பொய் என்பது தடயவியல் பரிசோதனை மூலம் தெரிய வந்துள்ளது.

கதுவாக சம்பவத்தில் 8வது குற்றவாளியான விஷால் ஜன்ஹோத்ரா, முக்கியக் குற்றவாளி சஞ்சி ராமின் மகனாவார். இவர் சம்பவம் நடந்த போது மீரட்டில் தேர்வெழுதிக் கொண்டிருந்ததாகவும், கதுவாவுக்கு வரவேயில்லை என்றும் கூறியிருந்த வாக்குமூலம், இதன் மூலம் பொய் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

மீரட்டில் உள்ள கல்லூரியில் விஷால் வேளாண்மை துறையில் இளநிலை பட்டப்படிப்பு படித்து வந்தார். கதுவாவில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவத்துக்குப் பிறகு, ஜம்முவில் இருந்து கிளம்பி மீரட்டுக்கு ரயிலில் சென்றுள்ளார். ஆனால், ரயில் தாமதமாக வந்ததால், அவர் மீரட்டுக்கு வருவதற்கு முன்பே தேர்வு முடிந்துவிட்டது என்று காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கதுவாவில் 8 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 8 பேரில், விஷால் ஜன்ஹோத்ரா என்பவர், பாலியல் வன்கொடுமை நடைபெற்றதாகக் கூறப்படும் நாட்களில், உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டில் நடைபெற்ற தேர்வில் கலந்து கொண்டு தாம் தேர்வு எழுதியதாக தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, மீரட்டில் தேர்வு நடைபெற்ற இடத்தில் மாணவர்கள் கையெழுத்திட்ட ஆவணம், ஜம்மு-காஷ்மீர் மாநில போலீஸாரிடம் தடயவியல் பரிசோதனைக்காக அளிக்கப்பட்டது. இதை ஜம்மு-காஷ்மீர் போலீஸார் தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

இந்த சோதனையில், தேர்வு கூடத்தில் இருக்கும் கையெழுத்துகளுக்கும், விஷால் ஜன்ஹோத்ராவின் கையெழுத்துகளுக்கும் பொருத்தமில்லை என்பதும், விஷால் தெரிவித்தது பொய் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இது அவருக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com