நக்ஸல் தீவிரவாதம் பலவீனமடைந்து வருகிறது: ராஜ்நாத் சிங் 

நாட்டில் நக்ஸல் தீவிரவாதம் ஒரு சவாலாக இருந்து வந்தது. ஆனால் தற்போது அது பலவீனமடைந்து வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
நக்ஸல் தீவிரவாதம் பலவீனமடைந்து வருகிறது: ராஜ்நாத் சிங் 

நாட்டில் நக்ஸல் தீவிரவாதம் ஒரு சவாலாக இருந்து வந்தது. ஆனால் தற்போது அது பலவீனமடைந்து வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் சிறப்புப் பிரிவான "பஸ்தாரியா' படைப்பிரிவு வீரர்கள் பயிற்சி முடித்து பணியில் சேரும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. 
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல் பாதித்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இப்படைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராஜ்நாத் சிங் பேசியதாவது:
நாட்டுக்கு சவாலாக இருந்த நக்ஸல் தீவிரவாதம், தற்போது பலவீனமடைந்து வருகிறது. 
அதேபோல், நக்ஸல் தாக்குதலில் பலியாகும் பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. 
நக்ஸலுக்கு எதிரான நடவடிக்கையில் உயிரிழக்கும் பாதுகாப்புப் படையினரின் அளவு 53 முதல் 55 சதவீதமாகக் குறைந்துள்ளது.
அதேபோல், நக்ஸல் தீவிரவாதம் பரவலாகியிருந்த இருந்த இடமும் 40 முதல் 45 சதவீதமாகக் குறைந்துள்ளது. 
இதற்கு, மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் மாநில போலீஸாரின் நக்ஸல் தடுப்பு நடவடிக்கைகளே காரணமாகும்.
பாதுகாப்புப் பணியில் இருக்கும் படை வீரரின் உயிரிழப்பை, பணத்தால் ஈடு செய்ய முடியாது. 
இருப்பினும் அவர்களுக்கான நன்றியாக, உயிரிழக்கும் படைவீரரின் குடும்பத்தினருக்கு குறைந்தபட்சம் ரூ.1 கோடி இழப்பீடாக வழங்குவதென அரசு முடிவு செய்துள்ளது.
எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் பழங்குடியினரின் தைரியத்தையும், அவர்களின் தேசப்பற்றையும் கருத்தில் கொண்டே, "பஸ்தாரியா' என்ற சிறப்புப் படைப் பிரிவை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. 
பாதுகாப்புப் படை வீரர்களுடைய குடும்பத்தினரின் பிரச்னைகளை தீர்க்கும் முயற்சியாக, குறைதீர் பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 
மாநிலத்தின் பின்தங்கிய பகுதிகளில் முதல்வர் ரமண் சிங் தலைமையிலான அரசு வளர்ச்சிப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது என்று ராஜ்நாத் சிங் பேசினார்.
"பஸ்தாரியா' சிறப்புப் படையில், சுக்மா, தண்டேவாடா, நாராயண்பூர், பிஜபூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 
நக்ஸலுக்கு எதிரான நடவடிக்கையில் பின்னடைவைச் சந்தித்து வரும் பகுதிகளில் பாதுகாப்புப் படையின் பலத்தை அதிகரிக்கும் வகையில் இப்படை உருவாக்கப்பட்டுள்ளது. 
இதில், அரசு கொள்கையின்படி 33 சதவீதம் வீராங்கனைகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com