தீண்டாமைக்கு முடிவு கட்ட வேண்டும்: வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்

நாடு சுதந்திரம் பெற்ற பிறகும், நாகரிகம் வளர்ச்சியடைந்த பிறகும் தொடரும் தீண்டாமை என்னும் கொடுமைக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
தீண்டாமைக்கு முடிவு கட்ட வேண்டும்: வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்

நாடு சுதந்திரம் பெற்ற பிறகும், நாகரிகம் வளர்ச்சியடைந்த பிறகும் தொடரும் தீண்டாமை என்னும் கொடுமைக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
கேரள மாநிலம், காலடியில் உள்ள ஆதிசங்கரா பொறியியல் கல்லூரியில், 2018-ஆம் ஆண்டுக்கான ஆதிசங்கரா இளம் விஞ்ஞானி விருதுகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு வெங்கய்ய நாயுடு விருதுகளை வழங்கி கெüரவித்தார். அதைத் தொடர்ந்து, அவர் பேசியதாவது:
நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், நாகரிகம் வளர்ச்சி அடைந்த பிறகும் துரதிருஷ்டவசமாக தீண்டாமை கொடுமை தொடர்கிறது. கோயிலுக்குள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது; உயர்ந்த ஜாதி-தாழ்ந்த ஜாதி பாரபட்சம் காட்டப்படுகிறது என்று இன்றளவும் தீண்டாமை கொடுமை தொடர்வதைப் பார்க்க முடிகிறது. இந்தக் கொடுமைகளுக்கு முடிவு கட்டப்பட வேண்டும்.
தீண்டாமையை ஹிந்து தத்துவம் ஒருபோதும் அனுமதித்தது கிடையாது. 8-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசங்கரர் நமக்கு ஒரு சிறந்த உதாரணம் ஆவார். அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்ல வேண்டும் என்பதே அவரது கொள்கையாகும். அவரது வழியை நாம் பின்பற்றி நடக்க வேண்டும். இது காலத்தின் அவசியமாக உள்ளது. நாம் யாரையும் புறக்கணிக்கக் கூடாது; யாரிடமும் பாகுபாடு காட்டக் கூடாது. யாருக்கும் வாய்ப்பு மறுக்கக் கூடாது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியால் நாட்டின் வருவாயை பெருக்குவதில் விஞ்ஞானிகள் கவனம் செலுத்த வேண்டும். அதுமட்டுமன்றி சமூக நல்லிணக்கத்துடன் தரமான, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வது எப்படி என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று வெங்கய்ய நாயுடு கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com