ம.பி. பேரவை தேர்தல்: அனைத்து தொகுதிகளிலும் சமாஜவாதி போட்டி

மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 230 தொகுதிகளிலும் தனித்து களமிறங்க உள்ளதாக சமாஜவாதி கட்சி அறிவித்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 230 தொகுதிகளிலும் தனித்து களமிறங்க உள்ளதாக சமாஜவாதி கட்சி அறிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமாஜவாதி கட்சி பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றபோது மொத்தமுள்ள 182 தொகுதிகளிலும், கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றபோது ஒருசில இடங்களிலும் போட்டியிட்டு அந்தக் கட்சி தோல்வியைத் தழுவியது.
இந்நிலையில், மத்தியப் பிரதேச தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் சமாஜவாதி கட்சி போட்டியிட இருப்பதாக அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ராஜேந்திர செளதரி தெரிவித்தார்.
தங்கள் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், கடந்த 18-ஆம் தேதியில் இருந்து மூன்று நாள்களுக்கு மத்திய பிரதேச மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதாகவும் அவர் கூறினார்.
இந்த சுற்றுப்பயணத்தின்போது பொதுக்கூட்டம் ஒன்றில் அகிலேஷ் யாதவ் பேசுகையில், பாஜகவின் 15 ஆண்டுகால தவறான ஆட்சியில் இருந்து மத்தியப் பிரதேச மக்களை சமாஜவாதி கட்சி மீட்டெடுக்கும் என்றார்.
தேர்தலில் தனித்துப் போட்டி என்று சமாஜவாதி கட்சி தெரிவித்தாலும், மத்தியப் பிரதேச மாநிலத்தில் பிரதான கட்சியாக உள்ள காங்கிரஸூடன் அக்கட்சி கூட்டணி வைக்கும் என்று தகவல்கள் 
தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com