வெளியில் இருந்து உத்தரவு பெறுகிறதா தமிழக காவல்துறை?: காங்கிரஸ் மூத்த தலைவர் கேள்வி 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பத்தில் தமிழக காவல்துறை வெளியில் இருந்து உத்தரவு பெற்றிருக்காது என்று நம்புவோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார்.
வெளியில் இருந்து உத்தரவு பெறுகிறதா தமிழக காவல்துறை?: காங்கிரஸ் மூத்த தலைவர் கேள்வி 

புதுதில்லி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பத்தில் தமிழக காவல்துறை வெளியில் இருந்து உத்தரவு பெற்றிருக்காது என்று நம்புவோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து நடந்து வரும் போராட்டமானது செவ்வாயன்று நூறாவது நாளை எட்டியது. செவ்வாய் காலையில் இருந்தே தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவதாக அறிவித்திருந்த போராட்டக்காரர்கள் பெருமளவில் குவிந்தனர். தடைகளை மீறி ஆட்சியர் அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட்டதால், காவலதுறையினர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் செவ்வாயன்று 11 பேரம், புதனன்று இருவரும் என மொத்தம் 13 பேர் மரணமடைந்தனர். இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பத்தில் தமிழக காவல்துறை வெளியில் இருந்து உத்தரவு பெற்றிருக்காது என்று நம்புவோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

ஜாலியன் வாலாபாக் படுகொலைகளை, ஸ்டெர்லைட் ஆலை போராட்ட பலிகளுடன் ஒப்பிடுவது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று கிடையாது. ஜாலியன் வாலாபாக் சம்பவத்தை நிகழ்த்தியது வெளியில்  இருந்து வந்திருந்த ஆங்கிலேயர்கள். பொது மக்கள் போராட்டத்தில் இந்த மரணங்கள் எப்படி நிகழ்ந்தது என ஸ்டாலின் கேட்பது 100 சதவீதம் நியாயமே. இதன் மூலம் தமிழக அரசை யாரோ இயக்குகிறார்கள் என்பது தெரிகிறது. மேலே இருந்து வரும் உத்தரவுக்கு ஏற்ப செயல்பட்டு தமிழக அரசு சந்தோஷமடைந்து வருகிறது. இந்த சம்பவத்தில் தமிழக காவல்துறை வெளியில் இருந்து உத்தரவு பெற்றிருக்காது என்று நம்புவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com