மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு தேசிய அரசியலில் தெலுங்கு தேசம் முக்கிய பங்காற்றும்: சந்திரபாபு நாயுடு

வரும் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, தேசிய அரசியலில் தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) முக்கிய பங்காற்றும் என்று அக்கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு தேசிய அரசியலில் தெலுங்கு தேசம் முக்கிய பங்காற்றும்: சந்திரபாபு நாயுடு

வரும் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, தேசிய அரசியலில் தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) முக்கிய பங்காற்றும் என்று அக்கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
ஹைதராபாதில் வியாழக்கிழமை நடைபெற்ற தெலுங்கு தேசம் கட்சியின் மாநாட்டில், அவர் இதுகுறித்து பேசியதாவது:
பெங்களூருவுக்கு அனைத்து கட்சித் தலைவர்களும் வந்தனர். அப்போது அனைவரும் சந்தித்து பேசினோம். 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, தேசிய அரசியலில் தெலுங்கு தேசம் ஆதரவு இல்லாமல் எந்த கட்சியாலும் எதையும் செய்ய முடியாது. தேர்தலுக்குப் பிறகு, தேசிய அரசியலில் தெலுங்கு தேசம் முக்கிய பங்காற்றும்.
கடந்த 1996ஆம் ஆண்டில், தேர்தலுக்குப் பிறகு, மத்தியில் தெலுங்கு தேசம் முக்கிய பங்காற்றும் எனத் தெரிவித்திருந்தேன். அதன்படி, மத்தியில் ஐக்கிய முன்னணி அமைவதில் தெலுங்கு தேசம் முக்கிய பங்காற்றியது. அதேபோல், ஹைதராபாதில் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன்.
பிரதமர் பதவி மீது எனக்கு எப்போதும் ஆசை கிடையாது. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, தெலங்கானாவிலும் தெலுங்கு தேசம் கட்சி முக்கிய சக்தியாக உருவெடுக்கும். ஹைதராபாத் நகரம் தற்போது தகவல் தொழில்நுட்ப மையமாக திகழ்வதற்கு தெலுங்கு தேசம் கட்சியே காரணம். ஹைதராபாத் நகரம் தகவல் தொழில்நுட்ப மையமாக உருவெடுப்பதற்கான அடிக்கல்லை நாட்டியது தெலுங்கு தேசம் கட்சிதான்.
2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது தெலுங்கு தேசத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக, ஆந்திரத்துக்கும், தெலங்கானாவுக்கும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றார் சந்திரபாபு நாயுடு.
மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் தெலுங்கு தேசம் கட்சி முன்பு அங்கம் வகித்தது. இதனிடையே, ஆந்திரத்துக்கு உடனடியாக மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தியது. 
இதை மத்திய அரசு ஏற்காததால், மத்திய அரசில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com