கட்டணமில்லா வழிகளில் வருவாய்: புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தும் ரயில்வே

கட்டணமில்லா வழிகளில் வருவாயை பெருக்குவதற்கான புதிய திட்டங்களை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.
கட்டணமில்லா வழிகளில் வருவாய்: புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தும் ரயில்வே


புது தில்லி: கட்டணமில்லா வழிகளில் வருவாயை பெருக்குவதற்கான புதிய திட்டங்களை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

ரயில்வே பயணிகளின் வசதியையும் மேம்படுத்தும் வகையில் இந்த புதிய, கட்டணமில்லா வழிகளில் வருவாய்க்கான நவீன திட்டங்களை இந்திய ரயில்வே செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டங்களை ஆரம்பத்தில் மண்டல அளவில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கட்டணமில்லா வழிகளில் வருவாயை பெருக்கும் வகையில் கொண்டு வரப்பட உள்ள இந்த திட்டங்கள் இதுவரை வேறு எந்த வகையிலும் சோதனை செய்து பார்க்கப்படாத திட்டங்களாகும். அறிமுகப்படுத்தப்படும் அனைத்துமே புதிய மற்றும் நவீன திட்டங்களாக இருக்கும்.

கட்டணமில்லா வழிகளில் வருவாயை பெருக்கும் இந்த திட்டங்களை திட்டமிட்டு, செயல்படுத்துவதற்கான அனைத்து அதிகாரங்களும் ரயில்வே மண்டல மேலாளருக்கு வழங்கப்படுகிறது.

ரயில்வேயின் தூய்மை, கட்டமைப்பு, தீத்தடுப்பு மற்றும் ரயில்வே விதிகள் எதுவும் சமரசம் செய்து கொள்ளப்படாமலும், அரசியல் ரீதியாகவோ, மத ரீதியாகவோ மக்களை தூண்டும் வகையிலோ இந்த திட்டங்கள் இருக்கக் கூடாது. இதற்காக எந்த நிரந்தர கட்டமைப்பும் ஏற்படுத்தப்படாது என்பதும் விதிகளாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் உடனடியாக அமலுக்கு வருகிறது.

ஏற்கனவே, கட்டணமில்லா வழிகளில் வருமானத்தைப் பெருக்க தனி நபர் அல்லது அமைப்புகளிடம் இந்திய ரயில்வே யோசனைகளைக் கேட்டிருந்தது. ரயில்வே நடைமேடைகளை திருமண நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடுவது போன்ற சில யோசனைகளும் ஏற்கனவே ரயில்வேக்கு வந்திருந்தன. அந்த வகையில் பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற திட்டங்களை செயல்படுத்தும் தீவிர முனைப்பில் ரயில்வே இறங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com