இவற்றுக்கும் மொழிப் பிரச்னை: மெல்ல ஹிந்தி கற்று வரும் கர்நாடக யானைகள்

யானைகள் மிகவும் புத்திசாலிகள். நினைவுக்கூர்மை அதிகம் கொண்டவை. மனிதனின் உடல் அசைவுகளை புரிந்து கொள்ளும் தன்மை கொண்டவை.
இவற்றுக்கும் மொழிப் பிரச்னை: மெல்ல ஹிந்தி கற்று வரும் கர்நாடக யானைகள்


பரேலி: யானைகள் மிகவும் புத்திசாலிகள். நினைவுக்கூர்மை அதிகம் கொண்டவை. மனிதனின் உடல் அசைவுகளை புரிந்து கொள்ளும் தன்மை கொண்டவை.

அதனால்தானோ என்னவோ, கர்நாடகாவில் இருந்து உத்தரப்பிரதேசத்துக்கு, வனப்பாதுகாப்புப் பணிக்கு கொண்டு செல்லப்பட்ட யானைகளுக்கு மொழிப் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

துத்வா புலிகள் சரணாலய அதிகாரி இது குறித்துக் கூறுகையில், கர்நாடகாவில் இருந்து 10 யானைகளை அழைத்து வந்து பாதுகாப்புப் பணிக்குப் பயன்படுத்த திட்டமிட்டோம். ஆனால், அந்த யானைகள் கன்னடத்தில் சொன்னால்தான் புரிந்து கொள்ளும். இங்கே எல்லோரும் ஹிந்திதான் பேசுவார்கள். எனவே, மொழிப் பிரச்னை ஏற்படும்.

இதனை தடுக்க, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 6 யானைப் பாகன்களை கர்நாடகாவுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே அனுப்பி, அங்கிருந்து அழைத்து வரப்படும் 10 யானைகளுடன் இருந்து அவற்றின் பாகன்கள் கன்னட மொழியில் யானையை எப்படி வழிநடத்துகிறார்கள் என்ற வார்த்தைகளை கற்றுக் கொண்டு வர அறிவுறுத்தினோம்.

அதே போல, யானைகள் உத்தரப்பிரதேசத்துக்கு அழைத்து வரும்போது, அவற்றுடன் கர்நாடகாவைச் சேர்ந்த 12 யானைப் பாகன்களும் உடன் வந்தனர்.

தற்போது, உத்தரப்பிரதேச பாகன்களின் கட்டுப்பாட்டில் யானைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. அவர்கள் கன்னட மொழியிலும், அதே அர்த்தம் கொடுக்கும் ஹிந்தியிலும் யானைகளை பழக்கி வருகின்றனர். யானைகளும் விரைவாக ஹிந்தியில் சொல்லும் வார்த்தைகளையும் புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளன. விரைவில் அவை ஹிந்தி மொழியை முழுமையாக புரிந்து கொள்ளும் என்று நம்புகிறோம் என்றார்.

இது பற்றி யானைப் பாகனாக உள்ள இர்ஷத் அலி கூறியதாவது, இந்த பயிற்சியின் போது திரும்பு, உட்காரு, பின்னாடி போ என்ற வார்த்தைகளுக்கு கன்னடத்தில் என்னவென்று அறிந்து கொண்டோம். தற்போது, கன்னட வார்த்தையுடன் சேர்த்து ஹிந்தியிலும் சொல்லி பழக்கி வருகிறோம். யானைகளும் ஹிந்தி வார்த்தைகளை கற்று வருகின்றன என்று தெரிவித்தார்.

இந்த புதிய மண்ணை யானைகள் ஏற்றுக் கொள்ள 4 மாதங்கள் ஆகும். அவ்வப்போது யானைகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. தங்களது யானைப் பாகன்களை அவ்வப்போது சந்தித்து விளையாடவும் அனுமதிக்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com