தில்லி-மீரட் ஸ்மார்ட் நெடுஞ்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

தில்லி முதல் மீரட் வரையிலான ஸ்மார்ட் நெடுஞ்சாலையை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.
தில்லி-மீரட் ஸ்மார்ட் நெடுஞ்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

தில்லி முதல் மீரட் வரையிலான அதிநவீன வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் நெடுஞ்சாலை ரூ.11 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 135 கி.மீ. நீளமுள்ள இந்த ஸ்மார்ட் நெடுஞ்சாலையில் சூரிய மின்சக்தியில் இயங்கும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நெடுஞ்சாலையில் வாகனங்களின் வேகத்தை சிறப்பு கேமரா மூலம் கண்காணித்து அபராதம் விதிக்கப்படும். ஒவ்வொரு 500 மீட்டர் தூரத்துக்கும் மழைநீர் சேமிப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் 36 நினைவுச் சின்னங்கள் பொருத்தப்பட்டுள்ளது. 

தில்லியின் மாசு 27 சதவீதம் குறையும் என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் இந்த சாலையில் பயணிப்பதன் மூலம் தில்லி முதல் மீரட் வரையிலான பயண நேரம் 2 மணிநேரத்தில் இருந்து 45 நிமிடங்களாக குறைகிறது.

அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் நெடுஞ்சாலையை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்து, அதில் சிறிது தூரம் பயணம் மேற்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com