நினைவு தவறிய முதியவரை குடும்பத்துடன் சேர்க்க உதவிய ஆதார் அட்டை

கேரளாவில் நினைவுகள் தவறிய முதியவரை குடும்பத்துடன் சேர்க்க ஆதார் அட்டை உதவிய நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நினைவு தவறிய முதியவரை குடும்பத்துடன் சேர்க்க உதவிய ஆதார் அட்டை

திருவனந்தபுரம்: கேரளாவில் நினைவுகள் தவறிய முதியவரை குடும்பத்துடன் சேர்க்க ஆதார் அட்டை உதவிய நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் உள்ள துங்கன்பாரா பகுதியில் வசித்து வருபவர் பஸி (80).  இவர் கடந்த சனிக்கிழமை அன்று துங்கன்பாராவில் கேரள அரசு பேருந்து ஒன்றில் ஏறி, நடத்துநரிடம் அருகில் உள்ள காரமனை பகுதிக்கு செல்வதற்காக பயணச் சீட்டு வாங்கியுள்ளார்.

ஆனால் குறிப்பிட்ட பேருந்து நிறுத்தம் வந்தும் அவர் இறங்கவில்லை. இதன் காரணமாக நடத்துநர் தொடர்ந்து அவரிடம் எங்கு இறங்க வேண்டுமென்று தொடர்ந்து கேட்டுள்ளார். ஆனால் அதற்கு பஸியால், அனுமன் கோயில் ஒன்று இருக்கும் இடத்தில் இறங்க வேண்டும் என்பதனைத் தவிர வேறு எதையும் கூற இயலவில்லை. திரும்பத் திரும்பக் கேட்டும் அவரிடம் வேறு பதில் இல்லை.  

அத்துடன் அவருக்கு காலில் வீக்கமும் இருந்தது. அத்துடன் ஞாபக மறதி வியாதியின் காரணமாக தான் செல்ல வேண்டிய இடம் அல்லது தனது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை பற்றி அவரால் கூற முடியவில்லை.

எனவே போலீசாரிடம் பேருந்தின் நடத்துநர் தகவல் தெரிவித்துள்ளார். வந்து விசாரித்த போலீஸாரிடமும் பஸியால் சரியான பதிலை தர முடியவில்லை.  அவரது சட்டைப் பையில் சில கசங்கிய ரூபாய் நோட்டுகள் தவிர வேறு எந்த விபரமும் இல்லை.

எனவே அவரிடம் ஆதார் அட்டை இருக்கலாம் என்ற எண்ணத்தில் போலீஸார்  அவரை அருகில் இருந்த கேரள அரசின் ஐ.சி.டி. ஆதார் சேவை மையத்திற்கு கொண்டு சென்றனர்.  அங்கு அவருடைய விரல் ரேகையினை  எடுத்து ஆய்வு செய்ததன் மூலம், அவர் ஆதார் அட்டை வைத்திருப்பவர் என்பது தெரிந்தது.

அந்த விபரங்களைக் கொண்டு பஸியின் முழுமையான பெயர், முகவரி மற்றும் பிற விவரங்கள் பெறப்பட்டு, அவரது குடும்பத்தினரை போலீசார் தொடர்பு கொண்டனர். பின்னர் அரசு வாகனத்திலேயே பஸியைக் கொண்டு சென்று குடும்பத்தினரிடம் ஒன்று சேர்த்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com