கேரள அரசின் முடிவை அனைவரும் பின்பற்ற வேண்டும்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

பெட்ரோல், டீசல் விலையை ரூ.1 குறைத்து கேரள அரசு எடுத்த இம்முடிவை நான் வரவேற்கிறேன். இதை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று தர்மேந்திர பிரதான் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
கேரள அரசின் முடிவை அனைவரும் பின்பற்ற வேண்டும்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

பெட்ரோல், டீசல் விலையை ரூ.1 குறைத்து கேரள அரசு எடுத்த இம்முடிவை நான் வரவேற்கிறேன். இதை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று தர்மேந்திர பிரதான் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

கர்நாடக தேர்தலுக்குப் பின்னர் கடந்த 16 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினம்தினம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் புதன்கிழமை 1 பைசா விலை குறைக்கப்பட்டது. இதனிடையே கேரள மாநிலத்தில் வருகிற ஜூன் மாதம் பெட்ரோல், டீசல் விலை ரூ.1 குறைத்து முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு வெளியிட்டார்.

இதுகுறித்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில்,

பெட்ரோல், டீசல் தினசரி விலை நிர்ணய முறை அமலுக்கு வந்த பின்னர் 1 பைசா, 12 பைசா மற்றும் 27 பைசா என்ற எண்ணிக்கையில் தொடர் ஏற்ற, இறக்கத்தை கண்டு வருகிறது. எனவே 1 பைசா விலை மாற்றம் என்பது புதிதல்ல. இருப்பினும் இன்று இந்த விலை நிர்ணயத்தில் எங்களின் ஊழியர் ஒருவர் தவறிழைத்து விட்டார். இந்த தவறை நான் ஏற்றுக்கொள்கிறேன். 

அதுபோல அதிக அளவில் வரி திரட்டும் மாநிலங்களில் ஒன்றான கேரள அரசு, தற்போது பொறுப்புணர்வுடன் மிக முக்கிய முடிவை எடுத்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையை ரூ.1 குறைத்து கேரள அரசு எடுத்த இம்முடிவை நான் வரவேற்கிறேன். 

பாஜக ஆளும் மாநிலங்கள் உட்பட அனைத்து மாநிலங்களும் இதை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு பெட்ரோல், டீசல் விலை குறைத்து பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com