16 நாட்களுக்குப் பிறகு குறைந்தது பெட்ரோல் விலை - இன்றைய நிலவரம்

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை 16 நாட்களுக்குப் பிறகு இன்று குறைந்துள்ளது.
16 நாட்களுக்குப் பிறகு குறைந்தது பெட்ரோல் விலை - இன்றைய நிலவரம்

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வரை இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. ஆனால், அந்த தேர்தலுக்கு பிறகு இந்தியா முழுவதும் பெட்ரோல் விலை நாளுக்கு நாள் ஏறுமுகமாகவே இருந்தது.

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு முதன்முதலாக 80 ரூபாய் எனும் புதிய உச்சத்தை தொட்டது. இதனால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இதற்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். 

இப்படி இருந்து வந்த நிலையில், ஒருவழியாக பெட்ரோல், டீசல் விலை 16 நாட்கள் கழித்து இன்று (புதன்கிழமை) குறைந்துள்ளது. இன்றைய (மே 30) நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 63 காசுகள் குறைந்து 80.80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

டீசல் விலை லிட்டருக்கு 60 காசுகள் குறைந்து 72.58 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

இதே போன்று இந்தியாவின் மற்ற முக்கிய நகரங்களில் விற்கப்படும் பெட்ரோல், டீசல் விலைகளின் இன்றைய நிலவரம்:

   பெட்ரோல்     குறைவு      டீசல்     குறைவு  
  சென்னை     ₹ 80.80      63 காசுகள்    ₹ 72.58  60 காசுகள்
  தில்லி     ₹ 77.83  60 காசுகள்    ₹ 68.75  56 காசுகள்
  மும்பை     ₹ 85.65  59 காசுகள்    ₹ 73.20  59 காசுகள்
  கொல்கத்தா     ₹ 80.47  59 காசுகள்    ₹ 71.30  56 காசுகள்
  ஹைதராபாத்       ₹ 82.45  63 காசுகள்    ₹ 74.73  61 காசுகள்
  பெங்களூரு     ₹ 79.10  61 காசுகள்    ₹ 69.93    57 காசுகள்  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com