நம்மைப் போன்றே நாளைய தினம் இவர்களுக்கும் தீபாவளியாம்!

இந்தியாவில் நாளைய தினம் தீபாவளிப் பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியைக் கொண்டாடத் தேவையான ஆயத்தப் பணிகளில் மக்கள் மிகுந்த ஆர்வத்தோடு ஈடுபட்டு வருகின்றனர்.
நம்மைப் போன்றே நாளைய தினம் இவர்களுக்கும் தீபாவளியாம்!


இந்தியாவில் நாளைய தினம் தீபாவளிப் பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியைக் கொண்டாடத் தேவையான ஆயத்தப் பணிகளில் மக்கள் மிகுந்த ஆர்வத்தோடு ஈடுபட்டு வருகின்றனர்.

வாசல்களில் வண்ணக் கோலமிடுவது, இனிப்பு, கார வகைகளை செய்வது, புத்தாடைகள், பட்டாசுகள் வாங்குவது என தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் மக்கள் மகிழ்ச்சியோடு தீபாவளியைக் கொண்டாடத் தயாராகி வருகிறார்கள்.

இந்தியாவிலேயே ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாக தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வட இந்தியர்கள் 5 நாட்கள் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்.

இது போல இந்தியாவில் மட்டுமல்ல இந்தியர்கள் அதிகம் வாழும் பிற நாடுகளிலும் நாளைய தினம் தீபாவளிப் பண்டிகைக் கொண்டாடப்பட உள்ளது.

ஃபிஜி
இங்கு பட்டாசுகள் வெடித்து தீபாவளிப் பண்டிகைக் கொண்டாடப்படுகிறது. நாளைய தினம்  அங்கு பொது விடுமுறை. பரிசுகளை அளித்தும் விருந்து நிகழ்ச்சிகளை நடத்தியும் தீபாவளியைக் கொண்டாடுவார்கள்.

இந்தோனேசியா
இந்தியர்கள் அதிகம் வசிக்காத நாடாக இருந்தாலும் இங்கு தீபாவளி பெரிய பண்டிகைதான். இந்தியாவில் கடைபிடிக்கப்படும் அனைத்து சம்பிரதாயங்களும் தீபாவளி நாளில் இவர்களும் செய்து மகிழ்கிறார்கள்.

மலேசியா
ஹரி தீபாவளி என்று இந்த பண்டிகைக்குப் பெயர். பட்டாசுகள் வெடிப்பது இங்கு தடை செய்யப்பட்டுள்ளது. 

மொரீஷியஸ்

இந்நாட்டின் 50 சதவீத மக்கள் இந்தியர்கள். பொது விடுமுறை தினமும் கூட. மக்கள் மகிழ்ச்சியாக தீபாவளியைக் கொண்டாடுவார்கள்.

நேபாளம்
திஹார் என்பது இந்த பண்டிகையின் பெயர். ஒரு பக்க எல்லையை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளும் நேபாளம், நமது பண்டிகையின் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்கிறது.

இலங்கை
இந்தியாவைப் போன்றே இங்கும் தீபாவளிப் பண்டிகைக் கொண்டாடப்படுகிறது.

சிங்கப்பூர்
சிங்கப்பூரின் குட்டி இந்தியா பகுதியில் தீபாவளிக் காய்ச்சல் படு வேகமாக உள்ளது. மின் விளக்கு அலங்காரங்கள் கலைகட்டுகின்றன.

பிரிட்டன்

ஏராளமான இந்தியர்கள் பூர்வீகமாக வாழ்ந்து வரும் பிரிட்டனில் தீபாவளியைக் கொண்டாடுவதில் ஆச்சரியம் என்ன இருக்கப் போகிறது.

டிரினிடட் மற்றும் டெபாகோ என்ற கரீபியன் தீவுப் பகுதிகளிலும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் திரையரங்குகளில் ராமாயணம் திரையிடப்படுவது ஆச்சரியம் அளிக்கும் தகவல்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com