திகார்: மனித உரிமை மீறலில் ஈடுபடுவதாக தமிழக போலீஸ் மீது புகார்: பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தில்லி, திகார் சிறை பாதுகாப்பில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் துறையினர், மனித உரிமை மீறலில் ஈடுபடுவதாக சில கைதிகள் அளித்துள்ள புகார் குறித்து பதிலளிக்க வேண்டும் என்று தில்லி


தில்லி, திகார் சிறை பாதுகாப்பில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் துறையினர், மனித உரிமை மீறலில் ஈடுபடுவதாக சில கைதிகள் அளித்துள்ள புகார் குறித்து பதிலளிக்க வேண்டும் என்று தில்லி அரசு, தமிழ்நாடு சிறப்பு காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக திகார் உயர்பாதுகாப்பு சிறை எண்-8-இல் உள்ள சுமார் 15 கைதிகள் தில்லி உயர்நீதிமன்றத்துக்கு புகார் கடிதம் எழுதியுள்ளனர். அதில், திகார் சிறை பாதுகாப்பு பணியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் துறையின் உதவி ஆய்வாளர், கைதிகள் மீது தாக்குதல் நடத்துவதாகவும், சில அதிகாரிகள் சோதனை என்ற முறையில், மனிதத் தன்மைக்கு மரியாதை அளிக்காத வகையில் கைதிகளிடம் மனித உரிமை மீறலில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த புகார் கடிதத்தை தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி வி.கே. ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு பொது நல மனுவாக மாற்றி விசாரணைக்கு ஏற்றது. இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன் அமர்வு, புகார் கடிதம் குறித்து பதிலளிக்க வேண்டும் என்று தில்லி அரசுக்கும், திகார் சிறைத் துறை இயக்குநருக்கும், தமிழ்நாடு சிறப்பு காவல் துறைக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், புகார் கடிதத்தில் கைதிகள் குற்றம்சாட்டியுள்ள அதிகாரிகள், தங்கள் தரப்பு விளக்கங்களையும் அளிக்க வேண்டும் என்று கூறி, வழக்கின் அடுத்த விசாரணையை ஜனவரி 14ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com