மெகா கூட்டணி என்பது இந்தியாவில் தோல்வியடைந்த முயற்சி -  அருண் ஜேட்லி

இந்தியாவில் மெகா கூட்டணி என்பது தோல்வியடைந்த ஒரு திட்டமாகும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி சனிக்கிழமை தெரிவித்தார். 
மெகா கூட்டணி என்பது இந்தியாவில் தோல்வியடைந்த முயற்சி -  அருண் ஜேட்லி

இந்தியாவில் மெகா கூட்டணி என்பது தோல்வியடைந்த ஒரு திட்டமாகும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி சனிக்கிழமை தெரிவித்தார். 

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி குறித்து அருண் ஜேட்லி மேலும் தெரிவித்ததாவது, 

"இந்தியாவில் மெகா கூட்டணி என்பது பல முயற்சிகள் மேற்கொண்டு, பரிசோதிக்கப்பட்ட தோல்வியடைந்த ஒரு திட்டமாகும். இந்த முயற்சியில் கொள்கை கொலை செய்யப்பட்டு, அந்த ஆட்சி சில மாதங்களுக்கே நீடிக்கும். 

ஒரு சில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மரபுவழியில்லாது தனித்துவமாக செயல்படுபவராக இருக்கலாம். ஒருவர் பிராந்தியத்தின் மீது மட்டும் பற்று கொண்டு மாநிலத்துக்கு நிதி ஒதுக்க வேண்டும் என இருக்கலாம். ஒரு சில தலைவர்களுக்கு அவர்களது குற்றவியல் வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்தால் மட்டுமே போதுமானதாக இருக்கலாம். இது போன்ற தலைவர்களின் அரசியல் கட்சிகளோடு கூட்டணி வைக்க முடியாது. 

இதுபோன்ற ஒரு கூட்டம் ஒன்றிணைந்தால், சீரான கொள்கை கொண்ட நிலையான அரசு மற்றும் முற்றிலும் ஒழுங்கற்ற கொள்கை கூட்டணிக்கும், வலிமையான தலைவருக்கும் இடையிலான மோதல் மட்டுமே 2019 தேர்தலில் வாய்ப்பாக இருக்கும்.   

தொழில் புரட்சியால் உலகம் முன்னேற்றம் கண்ட போது அந்த வாய்ப்பை நாம் இழந்துவிட்டோம். 1960 மற்றும் 1970-களில் இதற்கான வாய்ப்பு வந்தது. அப்போது சீனா வளர்ச்சி காண தொடங்கியது. அந்த வாய்ப்பை நாம் தவறவிட்டோம். வரலாறு மீண்டும் நம்மிடம் வந்து வாய்ப்பளிக்காது. ஆனால், தற்போது மீண்டும் நமக்கு வாய்ப்பளிக்கிறது. இந்நிலையில், இந்தியா தற்போது தொடர்ந்து வள்ர்ச்சியடைந்து வருகிறது.  

சமூகத்தில் நல்ல நிலைக்கு முன்னேறவேண்டும் என்று எண்ணும் சமுதாயம் தற்கொலை செய்து கொள்ள எண்ணாது என்று நினைக்கிறேன். அதனால், 2019 தேர்தலில் என்ன நடக்கப்போகிறது என்பது எனக்கு தெளிவாக உள்ளது.

வாராக்கடன் விவகாரம் குறித்து விவாதிக்க முதிர்ச்சியடைய வேண்டும், அதனை புரிந்துக்கொள்ள வேண்டும். இதுதொடர்பான விவாதம் முதிர்ச்சியடைந்த விவாதகமாக இருக்க வேண்டும். அது பற்றின புரிதல் இல்லாத நபருடன் விவாதிக்க முடியாது. 

இந்த மோசடியாளர்களுக்கு நீங்கள் கொடுத்த கடன்களை திரும்ப பெற நாங்கள் கஷ்டப்பட்டு வருகிறோம். அதனால் தான் சொல்கிறேன் இதுதொடர்பான விவாதம் ஆக்கப்பூர்வ விவாதமாக இருக்க வேண்டும். பொதுப் பிரச்னைகள் குறித்து விவாதிக்க முதிர்ச்சி பெற வேண்டும். முழக்கம் மட்டும் எழுப்பாமல் அதற்கு அப்பாற்பட்டு பிரச்னையை புரிந்துக்கொள்ள வேண்டும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com