உண்மைகளை உரக்கச் சொல்ல வேண்டிய நேரம் இது: 'மீ டூ'  குறித்து ராகுல் கருத்து  

உண்மைகளை உரக்கச் சொல்ல வேண்டிய நேரம் இது என்று 'மீ டூ' விவகாரம் தொடர்பாக எழும் குற்றச்சாட்டுகள் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். 
உண்மைகளை உரக்கச் சொல்ல வேண்டிய நேரம் இது: 'மீ டூ'  குறித்து ராகுல் கருத்து  

புது தில்லி: உண்மைகளை உரக்கச் சொல்ல வேண்டிய நேரம் இது என்று 'மீ டூ' விவகாரம் தொடர்பாக எழும் குற்றச்சாட்டுகள் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். 

நாடெங்கும் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பாலியல் சீண்டல்கள் மற்றும் வன்கொடுமைகள் குறித்து, அவர்கள் "மீ டு" என்ற ஹேஷ் டேகை பயன்படுத்தி தங்கள் கருத்துக்களை வலைத்தளங்களில்வெளியிட்டு வருகின்றனர். தமிழ்நாட்டிலும் அதன் தாக்கம் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் உண்மைகளை உரக்கச் சொல்ல வேண்டிய நேரம் இது என்று 'மீ டூ' விவகாரம் தொடர்பாக எழும் குற்றச்சாட்டுகள் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

எல்லோரும் பெண்களை மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்த வேண்டும் என்பதை கற்கும் நேரம் இது. 

சமூகத்தில் அவ்வாறு நடத்த இயலாதவர்களுக்கான இடம் இனி இல்லை என்பது மகிழ்ச்சியளிக்கிறது. மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்றால் உண்மை உரக்கவும் தெளிவாகவும் கூறப்பட வேண்டும். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com