சத்தீஸ்கர் காங்கிரஸ் தலைவர் அமித் ஷா முன்னிலையில் பாஜக-வில் இணைந்தார்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் சத்தீஸ்கர் காங்கிரஸ் தலைவர் ராம் தயாள் உய்கி, பாஜக-வில் சனிக்கிழமை இணைந்தார்.
சத்தீஸ்கர் காங்கிரஸ் தலைவர் அமித் ஷா முன்னிலையில் பாஜக-வில் இணைந்தார்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் சத்தீஸ்கர் காங்கிரஸ் தலைவர் ராம் தயாள் உய்கி, பாஜக-வில் சனிக்கிழமை இணைந்தார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் அங்கு ஆளும் பாஜக அரசு மீண்டும் 65 தொகுதிகளையும் கைப்பற்றி ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளது. 

இந்நிலையில், அம்மாநில காங்கிரஸ் தலைவரின் வரவு பாஜக-வுக்கு பெரும் வரவேற்பை பெற்றுத்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சத்தீஸ்கரின் பழங்குடியினத் தலைவர்களில் ஒருவரான உய்கி, சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மாநில பாஜக தலைவர் தரம்லால் கௌஷிக் மற்றும் முன்னணி தலைவர்கள் மத்தியில் பிலாஸ்பூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் தன்னை பாஜக-வில் மீண்டும் இணைத்துக்கொண்டார்.

முன்னதாக, 2000-ஆம் ஆண்டில் பாஜக-வில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக உய்கி, காங்கிரஸ் கட்சியில் அப்போது இணைந்தார். ஆனால், பழங்குடியினருக்கு காங்கிரஸ் கட்சி எவ்வித நன்மைகளையும் செய்யாது என்று குற்றம்சாட்டி தற்போது பாஜகவுக்கு மீண்டும் சென்றுள்ளார்.

4 முறை எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம் தயாள் உய்கி-இன் இந்த நடவடிக்கை காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com