ரஃபேல் ரகசியங்களை அறிந்ததால்தான் பாரிக்கர் பதவி பறிக்கப்படவில்லை: காங்கிரஸ்

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த ரகசியங்கள் பாரிக்கருக்கு தெரிந்ததால்தான் அவரை முதல்வர் பதவியில் இருந்து பாஜக நீக்கவில்லை என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த ரகசியங்கள் பாரிக்கருக்கு தெரிந்ததால்தான் அவரை முதல்வர் பதவியில் இருந்து பாஜக நீக்கவில்லை என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
 கோவா மாநில முதல்வராக இருக்கும் மனோகர் பாரிக்கர் கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னரும் மருத்துவ சிகிச்சைக்காக இந்த ஆண்டின் தொடக்கத்தில் 3 மாதம் அமெரிக்கா சென்று வந்தார்.
 அவர் அடிக்கடி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதால் மாநிலத்தில் நிர்வாக நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகவும், அதனால் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டியும் எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
 இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி பாரிக்கர் கோவா திரும்புவார் என்றும், கோவா கேபினட் அமைச்சர்களுக்கு கூடுதல் துறைகளை அளிக்க உள்ளதாகவும், கோவா முதல்வராக பாரிக்கர் தொடர்ந்து நீடிப்பார் என்றும் மத்திய அமைச்சர் ஸ்ரீபாத நாயக் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
 பாஜகவின் இந்த நிலைப்பாடு குறித்து கோவா மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் கிரிஷ் சோடான்கர் கூறியதாவது:
 மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக பாரிக்கர் இருந்துள்ளதால், அவருக்கு ரஃபேல் ஒப்பந்தம் குறித்த ரகசியங்கள் தெரிந்திருக்கலாம். அதனால்தான் அவரை முதல்வர் பதவியில் இருந்து பாஜக நீக்கவில்லையா என்று சந்தேகம் எழுகிறது. பாரிக்கரை பதவியில் இருந்து நீக்கினால் அவர் உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துவிடுவார் என்று பாஜக பயப்படுகிறது என்று அவர் கூறினார்.
 இதனிடையே, மாநிலத்தில் நிலையான முதல்வர் இல்லாததால், நிர்வாகத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்த கட்சிகளும் இப்போது நம்பிக்கை இழந்து விட்டன. உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இரு அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
 ஆனால் பாரிக்கரை பாஜக பதவியில் இருந்து நீக்காமல் இருப்பது ஏன்? என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பவன் கேரா கேள்வி எழுப்பியுள்ளார்.
 40 உறுப்பினர்கள் கொண்ட கோவா சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக 14 இடங்களில் வெற்றி பெற்றிருந்த நிலையில், தலா 3 இடங்களில் வெற்றி பெற்ற கோவா முன்னணி கட்சியும், மகாராஷ்டிர கோமந்தக் கட்சியும், 3 சுயேச்சை எம்எல்ஏக்களும், தேசியவாத காங்கிரஸின் ஒரு எம்எல்ஏவும் பாஜகவுக்கு ஆதரவு அளித்ததால் கோவாவில் பாஜக ஆட்சியைப் பிடித்தது
 குறிப்பிடத்தக்கது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com