பெண்கள் சமமாக நடத்தப்படவேண்டும்: பிரகாஷ் ஜாவடேகர்

சமூகத்தின் அனைத்துப் பகுதியிலும் பெண்கள் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.
பெண்கள் சமமாக நடத்தப்படவேண்டும்: பிரகாஷ் ஜாவடேகர்

சமூகத்தின் அனைத்துப் பகுதியிலும் பெண்கள் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார். 

இதுதொடர்பாக அவர் பேசுகையில், 

"வேலை பார்க்கும் இடம் மட்டுமில்லாது சமூகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பெண்கள் சமமாக நடத்தப்படவேண்டும் என்பதை நாங்கள் எப்போதும் கடைபிடித்து வருகிறோம். அதை தான் நாங்கள் எப்போதும் கூறுவோம். கருத்துக் கூற வேறு எதுவும் இல்லை. 

முன்னாள் மத்திய இணை அமைச்சர் எம்ஜே அக்பர் மீ டு பாலியல் குற்றச்சாட்டில் சிக்கினார். இதையடுத்து, அவர் பதவி விலக வேண்டும் என்று கடுமையான அழுத்தங்கள் எழுந்தன. இதற்கிடையில், அவர் மீது முதன்முதலாக மீ டு குற்றச்சாட்டு சுமத்திய பெண் பத்திரிகையாளர் பிரியா மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடுத்தார். இதைத்தொடர்ந்து, அவர் தனது அமைச்சர் பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தார். அவருடைய ராஜிநாமாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் இந்தக் கருத்தை தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com