டிட்லி புயல்: ஒடிசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 57-ஆக அதிகரிப்பு

ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட டிட்லி புயல் மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது. 
டிட்லி புயல்: ஒடிசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 57-ஆக அதிகரிப்பு

ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட டிட்லி புயல் மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது. 

வங்கக் கடலில் உருவான டிட்லி புயல், ஒடிசா மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு இடையே கடந்த 11-ஆம் தேதி கரையைக் கடந்தது. மணிக்கு 165 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. புயல் காரணமாக வட ஆந்திரா மற்றும் ஒடிசாவின் 5 கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. 

இதனால் மொத்தம் 17 மாவட்டங்களில் உள்ள 8,125 கிராமங்களைச் சேர்ந்த 60.11 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 57 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. 2.73 லட்சம் ஹெக்டோர் அளவிலான பயிர்கள் நாசமாகின. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் மாநில மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது. 10 பேர் காணாமல் போய் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com