தேர்தலின்போது மட்டும் ராமர் கோயில் பிரச்னையை எழுப்புவது ஏன்? பாகவத் மீது சமாஜவாதி விமர்சனம்

தேர்தல் காலங்களில் மட்டுமே ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்துக்கு ராமர் கோயில் பற்றிய நினைவு வருமா? என்று சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவர் ராம் கோவிந்த் செளத்ரி கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் காலங்களில் மட்டுமே ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்துக்கு ராமர் கோயில் பற்றிய நினைவு வருமா? என்று சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவர் ராம் கோவிந்த் செளத்ரி கேள்வி எழுப்பியுள்ளார்.
 உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக அவ்வப்போது பாகவத் கருத்து தெரிவித்து வரும் நிலையில், அதனை சாடும் வகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் ராம் கோவிந்த் செளத்ரி தெரிவித்ததாவது:
 மத்திய பாஜக அரசின் கடந்த நான்கு ஆண்டு கால ஆட்சியில் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சாமானியர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அனைத்து துறைகளிலும் அரசு நிர்வாகம் தோல்வியடைந்துள்ளது. மேலும், நாடு முழுவதும் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இதுபோன்ற சூழல்களால் ஆளும் பாஜக அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். அக்கட்சியின் செல்வாக்கு முழுவதுமாய் சரிந்துள்ளது.
 இதில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாஜகவும் ராமர் கோயில் பிரச்னையை எழுப்பி வருகின்றன. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தை பொருத்தவரை கடந்த இரு ஆண்டுகளாக ராமர் கோயில் தொடர்பாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் தற்போது அந்த விவகாரத்தை அவர் எழுப்புகிறார் என்றார் ராம் கோவிந்த் செளத்ரி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com