தூக்குத் தண்டனை வழக்குகளுக்கே முன்னுரிமை: உச்ச நீதிமன்றம்

தூக்குத் தண்டனை தொடர்பான வழக்குகளுக்கே முன்னுரிமைகள் கொடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தூக்குத் தண்டனை வழக்குகளுக்கே முன்னுரிமை: உச்ச நீதிமன்றம்


தூக்குத் தண்டனை தொடர்பான வழக்குகளுக்கே முன்னுரிமைகள் கொடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் தன்னார்வ தொண்டு அமைப்பு ஒன்று பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில், சில அரசியல்வாதிகள், அரசு உயரதிகாரிகள், பத்திரிகையாளர்கள், முக்கிய தொழில் நிறுவனங்கள் இடையே ரகசிய கூட்டணி உள்ளது; இதுகுறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி எஸ்.கே. கௌல் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு 65 முதல் 75 பேர் வரை சிறைகளில் உள்ளனர். அதிகாலையில் எழும்போது தாங்கள் உயிருடன் இருப்போமா, இல்லையா என்பது அவர்களுக்கே தெரியாது. நீதித்துறை நேரம் மிகவும் மதிப்புமிக்கது. 
ஆதலால், அவர்கள் தொடர்பான வழக்குகளுக்கே முன்னுரிமைகள் கொடுப்போம் என்றனர். அப்போது மனுதாரரான தன்னார்வ தொண்டு அமைப்பின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், முன்னுரிமைகள் குறித்து நானும் அறிவேன்; அதேநேரத்தில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள் இடையே இருக்கும் தொடர்புகள் குறித்து விசாரணை நடத்துவதும் அவசியம் என்றார்.
இதைக்கேட்ட நீதிபதிகள், பொதுநல மனுவுக்கு ஆதாரமாக தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்வியெழுப்பினர். அந்த ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு, எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தேவையான நம்பகமான ஆவணங்களை 6 வாரங்களுக்குள் மனுதாரர் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com