விமான நிலையத் தாக்குதல் சம்பவம்: வாக்குமூலம் அளிக்க ஜெகன்மோகன் ரெட்டி மறுப்பு  

விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் தன் மீது நடத்தப்பட்ட  தாக்குதல் சம்பவம் குறித்து காவலதுறையிடம் வாக்குமூலம் அளிக்க ஜெகன்மோகன் ரெட்டி மறுப்பு தெரிவித்துள்ளார். 
விமான நிலையத் தாக்குதல் சம்பவம்: வாக்குமூலம் அளிக்க ஜெகன்மோகன் ரெட்டி மறுப்பு  

ஹைதராபாத்: விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் தன் மீது நடத்தப்பட்ட  தாக்குதல் சம்பவம் குறித்து காவலதுறையிடம் வாக்குமூலம் அளிக்க ஜெகன்மோகன் ரெட்டி மறுப்பு தெரிவித்துள்ளார். 

ஹைதராபாத் செல்வதற்காக விசாகப்பட்டினம் விமான நிலையத்துக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவரும், ஆந்திர சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி வியாழக்கிழமை சென்றார். விமான நிலையத்தில் உள்ள விஐபி வளாகத்தில் அவரை ஸ்ரீனிவாச ராவ்(30) என்பவர் கத்தியால் தாக்கியுள்ளார். 

அதை தடுக்க முயன்ற ஜெகன் மோகனுக்கு தோளில் பலத்த காயம் ஏற்பட்டது. அதையடுத்து அந்த இளைஞரை சுற்றி வளைத்த பாதுகாப்பு வீரர்கள் அவரை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். காயமடைந்த ஜெகன் மோகனுக்கு விமான நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டது. அதையடுத்து ஹைதராபாத்துக்கு புறப்பட்ட அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனைûயில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் மோகன் சிறு காயத்துடன் உயிர் தப்பினார். 

விமான நிலையத்தில் உள்ள உணவகத்தில் பணிபுரியும் ஸ்ரீனிவாச ராவ், செல்ஃபி எடுக்க வேண்டும் என்று ஜெகன் அருகில் வந்ததாகவும், பின்பு திடீரென்று கத்தியை எடுத்து ஜெகனை குத்த முயன்றதாகவும், அந்த உணவகம் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ஹர்ஷவர்தனுக்கு சொந்தமானது என்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர். மேலும், ஜெகன் மோகனை கொல்வதற்கு தெலுங்கு தேச கட்சி திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளது என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ஸ்ரீனிவாச ராவ் கடந்த ஓர் ஆண்டாக அந்த உணவகத்தில் பணிபுரிந்து வருகிறார். சேவல் சண்டையில் பயன்படுத்தும் கத்தியை பயன்படுத்தி தாக்கியுள்ளார். அவரிடம் இருந்து கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என்று போலீஸார் தெரிவித்தனர். 

இதனிடையே, கடவுளின் கருணையால் தான் நலமாக இருப்பதாகவும், ஆந்திர மக்களின் அன்பு தன்னை பாதுகாக்கும் என்றும் ஜெகன் மோகன் தெரிவித்தார். இந்நிலையில், வெளியே எங்கேனும் தாக்குதல் நடந்திருந்தால் அதற்கு மாநில அரசு பொறுப்பேற்கும். ஆனால் இந்த சம்பவம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் விமான நிலையத்தில் நடைபெற்றுள்ளது. அதனால் மத்திய அரசுதான் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்க வேண்டும்  என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசை தாக்கி பேசினார்.

இந்நிலையில் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் தன் மீது நடத்தப்பட்ட  தாக்குதல் சம்பவம் குறித்து காவலதுறையிடம் வாக்குமூலம் அளிக்க ஜெகன்மோகன் ரெட்டி மறுப்பு தெரிவித்துள்ளார். 

ஹைதராபாத் தனியார் மருத்துவமனைûயில் அனுமதிக்கப்பட்ட ஜெகன் மோகன் வெள்ளியன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அப்போது அவரிடம் காவல்துறை குழு ஒன்று அணுகி சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்குமாறு கோரியது. 

அப்போது ஆந்திர மாநில காவல்துறையிடம் நமபிக்கை இல்லை என்பதால் வாக்குமூலம் அளிக்க இயலாது என்றும், வேறு ஏதாவது விசாரணை முகமையிடம் வாக்குமூலம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com