ஆர்.டி.ஐயில் கேள்வி கேட்டால் பதில் சொல்ல ஜிஎஸ்டி 

தகவல் அறியும் உரிமை சட்டமான ஆர்.டி.ஐயின் கீழ்  தகவல் கோரி மனுதாக்கல் செய்தவரிடம் பதில் ஆவணங்களுகாக ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. 
ஆர்.டி.ஐயில் கேள்வி கேட்டால் பதில் சொல்ல ஜிஎஸ்டி 

போபால்: தகவல் அறியும் உரிமை சட்டமான ஆர்.டி.ஐயின் கீழ்  தகவல் கோரி மனுதாக்கல் செய்தவரிடம் பதில் ஆவணங்களுகாக ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. 

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் ஊழல் எதிர்ப்பு ஆர்வலரான அஜய் துபே. இவர் மாநில வீட்டு வசதி மற்றும் கட்டுமான மேம்பாட்டு வாரியத்திடம் இருந்து பல்வேறு தகவல்களை கோரி, ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ் மனுதாக்கல் செய்தார்.

மாநிலத்தில் ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையத்திற்கான தலைமை அலுவலகத்தை புனரமைத்தது, புதிய கட்டிடங்கள் கட்டியதற்கு ஆன செலவு எவ்வளவு என்பது தொடர்பான தகவல்களை அவர் கேட்டிருந்தார். அதற்கு ஜிஎஸ்டி வரி செலுத்தினால் மட்டுமே தகவல் அளிக்கப்படும் என அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

அவரது மனுவின்படி தேவையான சேவை மற்றும் உரிய ஆவண நகல்களை பெறுவதற்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ பதில் ஆவணத்தின்படி துபே 45 ரூபாய் கட்டணமாக செலுத்தியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேவையான 18 பக்கங்களை நகலெடுக்க ரூ.36 கட்டணமும், மாநில, மத்திய ஜிஎஸ்டி வரி ரூ.7 என மொத்தம் ரூ.43 கட்டணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அஜய் துபே கூறியதாவது:

பொதுவாக ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ் தகவல்களை பெறுவதற்கு சிஜிஎஸ்டி மற்றும் எஸ்ஜிஎஸ்டி என வசூலிப்பது நியாயமற்றது மற்றும் சட்டவிரோத நடவடிக்கையாகும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் எனது தரப்பு கோரிக்கையை முன்வைப்பேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com