மக்கள் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவாலே

பெட்ரோல், டீசல் விலை உயர்வு எனக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று கூறிய கருத்து மக்கள் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவாலே தெரிவித்தார். 

அமைச்சர் என்பதால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்னை பாதிக்கவில்லை என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவாலே சனிக்கிழமை தெரிவித்தார். இந்த கருத்து மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அது மக்கள் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று ராம்தாஸ் அதாவாலே இன்று (ஞாயிற்றுக்கிழமை) விளக்கம் அளித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் கூறியதாவது, 

"பெட்ரோல், டீசல் விலை உயர்வால் உங்களுக்கு ஏதாவது பிரச்னை உள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். நான் அமைச்சர் என்பதால் அரசு வாகனங்கள் வழங்கப்படும். அதனால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று பதிலளித்தேன். ஆனால், மக்கள் பிரச்னைகளை சந்திக்கின்றனர். விலை குறைக்கப்பட வேண்டும். 

யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் இதை தெரிவிக்கவில்லை. ஒருவேளை மக்கள் உணர்வை பாதித்திருந்தால், நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். எந்தவித உள்நோக்கத்துடனும் இதை செய்யவில்லை. நான் சாதாரண குடிமகனாக இருந்து அமைச்சராகியுள்ளேன். மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் எனக்கு தெரியும். நான் அரசின் ஒரு பகுதி. பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட வலியுறுத்துகிறேன்" என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com