இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஐநா பொதுக்குழு கூட்டத்தில் சந்திப்பு 

இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இம்மாத இறுதியில் நடைபெற உள்ள ஐநா பொதுக்குழு கூட்டத்தில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஐநா பொதுக்குழு கூட்டத்தில் சந்திப்பு 

புது தில்லி: இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இம்மாத இறுதியில் நடைபெற உள்ள ஐநா பொதுக்குழு கூட்டத்தில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தில்லியில் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் வியாழனன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி இருவரும், இம்மாத இறுதியில் நியூயார்க் நகரில் நடைபெறவுள்ள ஐநா பொதுக்குழு கூட்டத்தில் சந்திக்க உள்ளனர். 

பாகிஸ்தான் தரப்பில் இருந்து விடுக்கப்பட்ட வேண்டுகோளைத் தொடர்ந்து, ஐநா பொதுக்குழுவினை ஒட்டி  இரு தரப்புக்கும் வசதியான ஒரு நாளில் இந்த சந்திப்பு நடைபெறும்.

நாங்கள் தற்போது சந்திப்புக்கு சம்மதம் மட்டுமே தெரிவித்துள்ளோம். ஐநாவில் உள்ள இருநாடுகளின் நிரந்தர தூதரகங்கள் இதற்கான ஏற்பாடுகளை இணைந்து செய்யும். அதுவரை இந்த கூட்டத்தில் என்ன பேசப்பட உள்ளது என்பது குறித்து நாம் பொறுத்திருக்க வேண்டும், 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

பாகிஸ்தானின் தொடர்ச்சியான எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களின் விளைவாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது. தற்போது பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான் கான் இந்தியப் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தின் காரணமாக இந்த சந்திப்பு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.       

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com