கேரள வெள்ள பாதிப்பு: ஜிஎஸ்டியில் கூடுதல் வரி மூலம் நிதி திரட்ட மத்திய அரசு திட்டம்

மழை-வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரளத்துக்கு, சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் (ஜிஎஸ்டி) கூடுதல் வரி விதிப்பின் மூலம் நிதி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 
கேரள வெள்ள பாதிப்பு: ஜிஎஸ்டியில் கூடுதல் வரி மூலம் நிதி திரட்ட மத்திய அரசு திட்டம்

புது தில்லி: மழை-வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரளத்துக்கு, சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் (ஜிஎஸ்டி) கூடுதல் வரி விதிப்பின் மூலம் நிதி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

கேரளத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை-வெள்ள பாதிப்புகள் அண்மையில் ஏற்பட்டன. நிலச்சரிவுகளால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் சீா்குலைந்தன. 480-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.

ரூ.20,000 கோடிக்கும் அதிகமான அளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, கேரள நிதியமைச்சா் தாமஸ் ஐசக், மத்திய நிதியமைச்சா் அருண் ஜேட்லியை தில்லியில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது, மாநிலத்தில் மறுகட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று அவா் வலியுறுத்தினாா். மேலும், கேரளத்தில் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டும் வகையில் ஜிஎஸ்டியின் கீழ் கூடுதல் வரி (செஸ்) விதிக்கும் திட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில், தாமஸ் ஐசக் சுட்டுரையில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பேரிடா்களால் பாதிக்கப்படும் மாநிலங்களுக்கு உதவும் நோக்கில், குறிப்பிட்ட பொருள்களுக்கு ஜிஎஸ்டியுடன் கூடுதல் வரி விதிப்பது குறித்த யோசனையை மத்திய நிதியமைச்சா் அருண் ஜேட்லி முன்வைத்துள்ளாா். அதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளாா்.

ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அப்போது, இத்திட்டம் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், ஜிஎஸ்டியின் கீழ் கூடுதல் வரி விதிக்க வேண்டுமெனில், ஜிஎஸ்டி சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒரே நாடு, ஒரே வரி என்ற கொள்கையின் அடிப்படையில் ஜிஎஸ்டி வரி முறை கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இதில், 5%, 12%, 18% மற்றும் 28% ஆகிய நான்கு அடுக்கு வரி விகிதங்கள் உள்ளன. ஆடம்பர பொருள்கள், உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் பொருள்களுக்கு அதிகபட்ச வரி விதிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com