ஐ.நா கட்டட மேற்கூரையில் சூரிய மின் தகடுகள் அமைக்க இந்தியா ரூ. 7 கோடி பங்களிப்பு

ஐ.நா. சபையின் கட்டட மேற்கூரையில் சூரிய மின் தகடுகள் அமைக்கும் திட்டத்துக்கு, இந்தியாவின் பங்களிப்பாக ரூ. 7 கோடியே 20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.


ஐ.நா. சபையின் கட்டட மேற்கூரையில் சூரிய மின் தகடுகள் அமைக்கும் திட்டத்துக்கு, இந்தியாவின் பங்களிப்பாக ரூ. 7 கோடியே 20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர தூதர் சையது அக்பரூதீன் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், கார்பன் வெளியீட்டை குறைப்பதற்காக, ஐ.நா. வின் சூரிய மின் திட்டத்துக்கு இந்தியா நிதியுதவி அளித்துள்ளது. இந்த தொகையால் ஜ.நா தலைமையக கட்டடத்தின் மேற்கூரைக்கு சூரிய மின் தகடுகள் பொருத்தப்பட உள்ளது. பருவநிலை மாற்றத்தை தடுக்க அனைவருக்கும் ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் அழைப்பு விடுத்திருந்தார். அதற்கு முதலில் பங்களித்தது இந்தியாதான்' என்று அவர் பதிவிட்டிருந்தார்.
இந்த பங்களிப்புக்கு நன்றி தெரிவித்து ஐ.நா துணை பொதுச் செயலாளர் ஜான் பீகல் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ஐ.நா.வின் சூரிய மின் திட்டத்துக்கு நிதி அளித்ததற்காக இந்தியாவுக்கும், இந்திய தூதர் அக்பரூதீனுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்' என்று பதிவிட்டிருந்தார்.
கடந்த ஜூன் 5-ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தின விழாவின் போது, ஐ.நா வின் சூரிய மின் திட்டத்துக்கு இந்தியா பங்களிக்க விரும்புகிறது என்று அக்பரூதீன் கூறியிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com