ஒடிசாவின் ஜார்சுகுடா விமான நிலையத்தைத் துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

ஒடிசா மாநிலத்தில் கனிம வளங்கள் நிறைந்த ஜார்சுகுடா பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.
ஒடிசாவின் ஜார்சுகுடா விமான நிலையத்தைத் துவக்கி வைத்தார் பிரதமர் மோடி


ஜார்சுகுடா: ஒடிசா மாநிலத்தில் கனிம வளங்கள் நிறைந்த ஜார்சுகுடா பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.

ஒடிசா மாநிலத்தை முன்னேற்றப் பாதைக்கும், நாகரீக வளர்ச்சிக்கும் கொண்டு செல்லும் வகையில் இந்த விமான நிலையம் அமைந்திருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்தார்.

ஒடிசாவில் இதுவரை ஒரே ஒரு பெரிய விமான நிலையம் மட்டுமே அமைந்திருந்தது. அதே சமயம், குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் மட்டும் 5 விமான நிலையங்கள் இருப்பதையும் மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.

கனிம வளங்கள் நிறைந்த இப்பகுதியில் புதிய விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து, ஏராளமான முதலீட்டாளர்கள் இப்பகுதிக்கு வந்தடைய முடியும் என்றும், நாட்டின் கிழக்கு மாநிலங்களான ஒடிசா, மேற்கு வங்கம், அஸ்ஸாமை முன்னேற்றுவதன் மூலம் நாட்டின் முன்னேற்றத்தை சமநிலைப்படுத்த முடியும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.


மீண்டும் வருவேன்: ஒடிசா மாநிலம் அங்குல் மாவட்டத்தில் தல்சேர் உரத் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இன்று இந்த ஆலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளில் உரத் தொழிற்சாலை கட்டி முடிக்கப்பட்டதும் மீண்டும் வந்து ஆலையைத் திறந்து வைப்பேன் என்று கூறினார்.

2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராவேன் என்பதை சூசகமாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ஏராளமான தொழிற்சாலைகள் மூடப்பட்டதாகவும், மூடப்பட்ட தொழிற்சாலைகளைத் திறக்க அந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com