கோவாவில் பாரிக்கர் அரசு தானாகவே கவிழும்: காங்கிரஸ்

கோவாவில் முதல்வர் மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாஜக கூட்டணி அரசு தானாகவே கவிழும்; மாநிலத்தில் அடுத்து காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.


கோவாவில் முதல்வர் மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாஜக கூட்டணி அரசு தானாகவே கவிழும்; மாநிலத்தில் அடுத்து காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
மொத்தம் 40 உறுப்பினர்களைக் கொண்ட கோவா பேரவைக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 17 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், 13 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, உதிரி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. முதல்வராக மனோகர் பாரிக்கர் பதவியேற்றார். தற்போது அவர் கணைய நோயால் பாதிக்கப்பட்டு அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சூழலில், மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாஜக கூட்டணி அரசு தானாகவே கவிழும் நிலையில் உள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கோவா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ஏ.செல்லக்குமார் கூறியதாவது:
பணத்துக்காகவும் அதிகார மோகத்துக்காகவும் தங்களது கொள்கைகளையே விற்றவர்கள் ஒன்று சேர்ந்து அமைத்ததுதான், பாரிக்கர் தலைமையிலான அரசாகும். தற்போது அந்த அரசு தானாகவே கவிழும் நிலையில் இருக்கிறது. கோவா மக்களின் நலன் கருதி, அடுத்து காங்கிரஸ் ஆட்சியமைக்கும். கோவா காங்கிரஸ் தலைவர்களிடையே எந்த பூசலும் இல்லை என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com