ஏழைகளுக்கு கண்ணியமான வாழ்க்கை அளித்துள்ளார் மோடி: அமித் ஷா புகழாரம்

தேசிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை (ஆயுஷ்மான் பாரத்) தொடங்கியதன் மூலம் ஏழை மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை பிரதமர் நரேந்திர மோடி அளித்துள்ளார் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஏழைகளுக்கு கண்ணியமான வாழ்க்கை அளித்துள்ளார் மோடி: அமித் ஷா புகழாரம்

தேசிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை (ஆயுஷ்மான் பாரத்) தொடங்கியதன் மூலம் ஏழை மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை பிரதமர் நரேந்திர மோடி அளித்துள்ளார் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
 இந்தியாவில் 50 கோடி மக்களுக்கு இலவச மருத்துவக் காப்பீடு அளிக்கும் உலகின் மிகப்பெரிய காப்பீட்டுத் திட்டத்தை பிரதமர் மோடி, ஜார்க்கண்டில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார். "மோடி கேர்' என்று பாஜகவினரால் புகழப்படும் இத்திட்டம் குறித்து அமித் ஷா கூறியதாவது:
 மத்திய அரசு ஏழை, எளிய மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இதில் மிக முக்கியமாக 50 கோடி பேர் பயன் பெறும் தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்துள்ளார். இதன் மூலம், ஏழை, எளிய மக்கள் கண்ணியமாக வாழ வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் ஏழை மக்கள் ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவம் பெற முடியும்.
 ஏற்கெனவே பிரதமர் வீட்டு வசதித் திட்டம், நேரடி மானியத் திட்டம், குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு, பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் மத்திய அரசு ஏழைகளின் வாழ்க்கையை முன்னேற்றியுள்ளது. இப்போது, அதில் மேலும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, ஏழைகளின் மருத்துவத் தேவையை முழுமையாக மத்திய அரசு நிறைவு செய்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
 லக்னெüவில் ராஜ்நாத் தொடங்கி வைத்தார்: ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை உத்தரப் பிரதேச தலைநகர் லக்னெüவில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார். பிரதமர் மோடி இத்திட்டத்தை ஜார்க்கண்டில் தொடங்கி வைத்த அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சியும் நடைபெற்றது.
 நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், "இது வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். இதன் மூலம் பிரதமர் மோடியின் பாதுகாப்பு ஏழை மக்களுக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம் மருத்துவ வசதி கிடைப்பது மட்டுமின்றி, புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும். உத்தரப் பிரதேசத்தில் இத்திட்டத்தால் 6 கோடி பேர் பயனடைவார்கள்' என்றார்.
 உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், தேசிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை தொடங்கிவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com