மோடியை நீக்க காங்கிரஸ், பாகிஸ்தான் விரும்புகிறது: பாஜக

இந்திய அரசியலில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியை நீக்குவதற்கு காங்கிரஸ் மற்றும் பாகிஸ்தான் தலைவர்கள் விரும்புகிறார்கள் என்று பாஜக தெரிவித்துள்ளது.
மோடியை நீக்க காங்கிரஸ், பாகிஸ்தான் விரும்புகிறது: பாஜக


இந்திய அரசியலில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியை நீக்குவதற்கு காங்கிரஸ் மற்றும் பாகிஸ்தான் தலைவர்கள் விரும்புகிறார்கள் என்று பாஜக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பிட் பத்ரா கூறியதாவது:
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், முன்னாள் அமைச்சர்கள் உள்பட பல பாகிஸ்தான் தலைவர்கள் பிரதமர் மோடியைத் தாக்கி சுட்டுரையில் பதிவிட்டிருந்தார்கள். அவர்கள் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்கள். 
இந்தியாவில் ராகுல் காந்தி பெரிய தலைவராக உருவெடுக்க வேண்டும் என சிலர் விரும்புகிறார்கள். பாகிஸ்தான் தலைவர்கள், ஊழல்வாதிகள் மற்றும் குடும்ப அரசியலுக்கு ஆதரவு அளிப்பவர்கள் தான் இவ்வாறு விரும்புகிறார்கள். 
ஆனால் மோடிக்கு, பின்தங்கிய மக்கள், தலித்துகள் மற்றும் பொது மக்களின் ஆதரவு உள்ளது. அதனால் அவரை யாராலும் அரசியலில் இருந்து அகற்ற முடியாது.
மோடியை எப்படியேனும் அரசியலில் இருந்து விலக்குவதையே, காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பாகிஸ்தான் தலைவர்கள் குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். பாஜக தலைவர் அமித் ஷா கூறியதை போல, மோடிக்கு எதிராக, பாகிஸ்தான் தலைவர்களுடன் காங்கிரஸ் கட்சி மாபெரும் கூட்டணி வைத்தாலும் ஆச்சரியமில்லை.
ராகுலும் அவரது கட்சி தலைவர்களும் பிரதமர் மோடியிடம் இருந்து ஒன்றை கற்றுக் கொள்ள வேண்டும். மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீஃப் அவரை தாக்கி பேசினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த மோடி விடியோ வெளியிட்டிருந்தார்.
காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மோடியை தாக்கி பேசுவதில் குறியாக உள்ளனர். ஜனநாயக நாட்டில் எதிர்ப்பு தெரிவிப்பது என்பது முக்கியமான விஷயம். ஆனால் அந்த எதிர்ப்பு கண்ணியத்துடன் இருக்க வேண்டும்.
எல்லா நேரமும் வேலை தான், விடுமுறை தேவையில்லை என்று மோடி பணியாற்றுகிறார். ஆனால் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேலையும் வேண்டாம்;தலைவலியும் வேண்டாம் என்று ஆட்சி செய்தது என்று அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com