தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: எய்ம்ஸ் மருத்துவமனையுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

பிரதமர் ஜன் ஆரோக்கிய யோஜ்னா எனும் தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக தேசிய சுகாதார முகமையுடன் (என்எச்ஏ) அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துவமனை (எய்ம்ஸ்) புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. 
தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: எய்ம்ஸ் மருத்துவமனையுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்


புது தில்லி: பிரதமர் ஜன் ஆரோக்கிய யோஜ்னா எனும் தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக தேசிய சுகாதார முகமையுடன் (என்எச்ஏ) அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துவமனை (எய்ம்ஸ்) புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. 

இதன் மூலம், மத்திய அரசின் சுகாதார காப்பீட்டுத் திட்டத்தில் சோ்ந்த தில்லியில் உள்ள முதல் மருத்துவமனையாக எய்ம்ஸ் உருவாகியுள்ளது.

தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றற இதற்கான நிகழ்வில் எய்ம்ஸ் இயக்குநா் டாக்டா் ரந்தீப் குலேரியா, என்எச்ஏ தலைமை செயல் அதிகாரி தினேஷ் ஆரோரா ஆகியோா் முறைப்படியாக புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனா்.

இது குறித்து எய்ம்ஸ் மருத்துவமனையின் செய்தித் தொடா்பாளா் டாக்டா் ஆா்த்தி விஜ் கூறுகையில்,‘இந்த தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் ஷரத்துகளின்படி எய்ம்ஸ் மருத்துவமனையில் சோ்க்கப்படும் திட்டப் பயனாளி நோயாளிகளுக்கு அனைத்து சிகிச்சை மற்றும் பரிசோதனைகளை எய்ம்ஸ் மேற்கொள்ளும்’ என்றாா்.

‘பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா- ஆயுஷ்மான் பாரத்’ என்று பெயரிடப்பட்டுள்ள தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை ஜாா்க்கண்டில் தொடங்கிவைத்தாா். 
ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு வசதி அளிக்கும் நோக்குடன், 10.74 கோடிக்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்கள் தோ்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளில் மருத்துவ வசதி பெற்று பயனடையும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com