15. இரையும் ஜீவனும் இயற்கையும்

15. இரையும் ஜீவனும் இயற்கையும்

2017-ஆம் ஆண்டின் அனிமேசன் வகைக் குறும்படப் பிரிவில் அகாடமி அவார்டை வென்றிருக்கும்

Piper (2016) / Director: அலன் பரில்லரோ (Alan Barillaro)

2017-ஆம் ஆண்டின் அனிமேஷன் வகைக் குறும்படப் பிரிவில் அகாடமி அவார்டை வென்றிருக்கும் இக்குறும்படத்தை இயக்கியவர் வால்-ஈ மற்றும் ஃபைண்டிங் நீமோ என்ற திரைப்படங்களில் பணிபுரிந்த அலன் பரில்லரோ.

‘But I don't want comfort. I want God, I want poetry, I want real danger, I want freedom, I want goodness. I want sin.’ - Aldous Huxley, Brave New World
 

கடற்கரை. பெரிய பறவை ஒன்று தீனி எடுத்துக் கொருக்கிறது. அலையடித்துக் கொண்டிருக்கிறது. குஞ்சுகள் அலை மற்கரையில் பாவி முடித்த பின்பு இரையெடுக்க ஓடி வருகின்றன. ‘பைப்பர்’ என்ற குறும்படத்தின் தலைப்பு மேலெழுகிறது. ஆர்ப்பரிப்பு இரைச்சல் ஓங்குகிறது. அலைகள் குஞ்சுகளை விரட்ட அவைகள் கரையை நோக்கி ஓடுகின்றன. அலையும் பசியும் அலைக்கழிக்கப்படுகின்றன.

நாணல் புதரொன்றின் நடுவே குஞ்சொன்று தனித்திருக்கிறது. உள்நடுக்கம் உறைய பேரண்டத்தின் பிரம்மாண்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. தனியே இரையெடுக்கப் பணிக்க தாய்ப்பறவை அதனை மெல்ல கூட்டிலிருந்து நகர்த்த முயற்சிக்கிறது. கூட்டை விட்டு வெளியேற அஞ்சும் அது தாய்பறவையின் உந்தித் தள்ளுதலுக்கு எதிர் விசை கூட்டுகிறது. தாய்ப்பறவைகள் அன்றி இரையெடுத்துக்கொண்டிருக்கும் குஞ்சுகளின் நடுவில் போய் நின்று தனது குஞ்சை கூவி அழைக்கிறது தாய். தன்னை அலையடித்துக் கொண்டு போய்விடும் என்று பயப்படும் குஞ்சு போக மறுக்கிறது. தாய் இரையெடுக்க தூண்ட அதுவோ கடல்நீர்க் குமிழிகளை கொத்தி ஏமாந்து போகிறது. தாய்ப்பறவை கற்றுக் கொடுக்க தவிக்க குஞ்சோ ஏகத்திற்கும் தடுமாறுகிறது. அலை அதை அள்ளிக் கொண்டு போகிறது.

நீரால் நனைந்து கூட்டில் நடுங்கிக் கொண்டிருக்கிறது. தாய்ப்பறவை எவ்வளவோ மன்றாடியும் வெளிவர மறுத்து ஓடி ஒளிந்து கொள்கிறது. தாய் வெறுத்துப் போய் தனியே இரையெடுக்க கிளம்பி விடுகிறது. தரைக் கூட்டைவிட்டு மெல்ல எட்டிப் பார்க்க கடலலை பேரிரைச்சலிட்டு கிளம்பி வருவதைப் பார்த்து மீண்டும் ஓடி ஒளிகிறது அந்தக் குஞ்சுப்’பறவை’.. பறவையென்ற தன் முனைப்பு உந்த தனியே இரையெடுக்க கடலை நோக்கி கிளம்புகிறது. அலை இதை நோக்கி வர ஒரு சிறு பாறையொன்றின் பின் மறைந்து கொள்கிறது. அலை பின்னேர இதுவோ முன்னேறுகிறது. மீண்டுமொரு அலை அடிக்க சருகுகளில் போய் பதுங்குகிறது. அது சருகல்ல தாய் நண்டு. ஏதோவொன்று அதை மெல்ல நகர்த்த காலடியில் ஒரு சிறு நண்டு இதை ஓரந்தள்ளிவிட்டு அதன் இரையைத் தேடி கடலை நோக்கிப் போகிறது. நண்டை தடுக்கிறது குஞ்சுப்பறவை. நண்டு குஞ்சின் பயத்தை புறந்தள்ளிவிட்டு தனியே போகிறது.

அலையைக் கண்டு பயப்படாமல் கிளிஞ்சல்களின் உள்ளிருக்கும் ஊணை உண்ணுகிறது. குஞ்சுப்பறவை அதை அதிசயமாய் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அலையொன்று வர நண்டுவோ மணலில் புதைந்து கொள்கிறது. குஞ்சுப்பறவை தடுமாறுகிறது. அலை போய்விட நண்டு எதுவுமே நடவாததுபோல் மீண்டும் இரையெடுக்கத் தொடங்குகிறது. அலை வர குஞ்சுப்பறவையும் மணலுள் புதைய மருள் மூடுகிறது. கண்ணை மூடிக்கிடக்கும் அதை பால் நண்டு தட்டிக் கொடுக்கிறது. அலைகடல் மணலில் புதையும் கிளிஞ்சல்களைக் கண்டுகொள்கிறது. சுருண்டு கிடக்கும் குஞ்சுப்பறவை எழுந்து நின்று தைரியமாக தற்போது இரை தேடத் தொடங்குகிறது. சூட்சுமம் பிடிபட்டதாக தாய்ப் பறவையிடம் ஜாலம் காட்டுகிறது. கிளிஞ்சல் ஊண்களை உண்ணுகிறது. மற்ற குஞ்சுப் பறவைகளுக்கும் வழி காட்டுகிறது. தாய் நிம்மதிப் பெருமூச்செறிகிறது.

ஏனோ இக்கணம் இக்கவிதை மனதில் மேலெழுகிறது.

படிப்பு

புரியவேயில்லை
அவளுக்கு
பட்டுப்பூச்சி படம்காட்டி
டீச்சர்
வண்ணத்துப் பூச்சி
என்று
கற்பித்துக் கொண்டேஇருந்தது.

கடைசியில்
கஷ்டப்பட்டு
அவளும்
வண்ணத்துப்பூச்சி
என்று
சொல்ல ஆரம்பித்தாள்.

பட்டுப்பூச்சி என்று
அதை
அதன் வீட்டில்
கூப்பிடுவார்களாக இருக்கும்
என்று எண்ணியபடி.

-வீரான் குட்டி (மலையாளம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com