ஒரு கிங்பிஷர் பீர்  2 ரூபாய்: மும்பை மதுப் பிரியர்களுக்கு சலுகை

மதுவுக்கு நிகர் இந்த உலகில் மதுவைத் தவிர வேறு இல்லை என்று கூறிக் கொள்ளும் மதுப் பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.
ஒரு கிங்பிஷர் பீர்  2 ரூபாய்: மும்பை மதுப் பிரியர்களுக்கு சலுகை

மதுவுக்கு நிகர் இந்த உலகில் மதுவைத் தவிர வேறு இல்லை என்று கூறிக் கொள்ளும் மதுப் பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. மும்பையை சேர்ந்த தனியார் பார் ஒன்று மது பிரியர்களுக்காக அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது.

மும்பையில் ஒரு கிங்பிஷர் பீர்  2 ரூபாய்க்கும்  ஜானி வாக்கர் பிளாக் லேபிள் 49 ரூபாய்க்கும் சலுகை விலையில் மும்பை பார்களில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சலுகை விலை 4 நாட்களுக்கு மட்டுமே. இன்று 4ம் தேதி தொடங்கி டிசம்பர் 8ம் தேதி  வரை மும்பை குடிமகன்கள் இந்த சலுகை விலையில் மது அருந்தி கொண்டாடலாம். இது ஒரு ஏமாற்று வித்தை இல்லை.

உண்மையில் மகிழ்ச்சியான தள்ளுபடி என்றும்  மேலும் மதியம் முதல் பார் முடியும் நேரம் மட்டுமே இந்த சலுகையை வழங்கபபடும் என்றும் பார் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com