திமுக தலைவர் கருணாநிதி நாளை அல்லது நாளை மறுநாள் வீடு திரும்புவார்: ஜி.ராமகிருஷ்ணன்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரிக்க  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று  காலை காவேரி மருத்துவமனை வந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: -
கருணாநிதியின் உடல் நலம் குணம் அடைந்துள்ள நிலையில் அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மு.க.ஸ்டாலின் வெளியூர் சுற்றுப்பயணத்தில் இருப்பதால் இன்று டிஸ்சார்ஜ் ஆகவில்லை. நாளை மாலையில்தான் மு.க.ஸ்டாலின் சென்னை வருகிறார்.

அதன் பிறகு நாளை அல்லது நாளை மறுநாள் மருத்துவமனையில் இருந்து கருணாநிதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com