நெல்லை மாவட்டத்தில்  மிதமான மழை

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் திங்கள்கிழமை பிற்பகலில் மிதமான மழை பெய்தது.

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் திங்கள்கிழமை பிற்பகலில் மிதமான மழை பெய்தது.

நிகழாண்டு வடகிழக்குப் பருவ மழை பொய்த்ததால் தாமிரவருணி பாசனத்தில் பிசான பருவ சாகுபடிக்கு அணைகளில் இருந்து இன்னமும் தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் அவ்வப்போது மிதமான மழை பெய்து வருகிறது.

திங்கள்கிழமை காலை நிலவரப்படி சேர்வலாறு அணைப் பகுதியில் 1 மி.மீ, சேரன்மகாதேவியில் 2 மி.மீ மழை பதிவாகியுள்ளன. இதனிடையே பிற்பகலில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தருவை, பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல் மற்றும் சேரன்மகாதேவி உள்பட பல்வேறு பகுதியில் மிதமான மழை பெய்தது.

பாபநாசம் அணையின் நீர்மட்டம் 30.40 அடி, சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 60.10 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 35.74 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம் 49.50 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 42.50 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 38.29 அடி, 

குண்டாறு அணையின் நீர்மட்டம் 23.12 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 65.00 அடி, வடக்குப்பச்சையாறு அணையின் நீர்மட்டம் 3.25 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம் 10.04 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 7.00 அடியாகவும் இருந்தது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 97.32 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு

22 கனஅடி, கடனாநதி அணைக்கு விநாடிக்கு 6 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. பாபநாசம் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 204.75 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com