கிருஷ்ண நீர் வரத்து அதிகரிப்பு பூண்டி ஏரியில் நீர் மட்டம் உயர்வு

கிருஷ்ணா தண்ணீர் வரத்து அதிகரிப்பால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

சென்னை

கிருஷ்ணா தண்ணீர் வரத்து அதிகரிப்பால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

புதன்கிழமை காலை நிலவரப்படி பூண்டி ஏரியில் 21.27 அடி தண்ணீர் உள்ளது. நீர் அதிகரித்து வருவதால் புழல் ஏரிக்கு கூடுதலாக தண்ணீர் திறக்கப்படுகிறது. 

லிங்கால்வாயில் 300 கனஅடியும், பேபி கால்வாயில் 30கனஅடி தண்ணீர் திறந்து விடுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிருந்து கடந்த மாதம் 21 ஆம் தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் 27 ஆம் தேதி பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது.

முதலில் 500 கனஅடி வீதம் திறக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. தற்போது 1700 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

தண்ணீர் வரத்து அதிகரிப்பால் பூண்டி ஏரியில் நீர்மட்டம் கிடுகிடு என்று உயர்ந்து வருகிறது. பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் வினாடிக்கு 476 கனஅடியும், மழைநீர் 88 கனஅடியும் வந்து கொண்டிருக்கிறது. பூண்டியில் இருந்து புழல் ஏரிக்கு லிங்க் கால்வாயில் 200 கனஅடியும், பேபி கால்வாய் மூலமாக 30 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

கடந்த மாதம் 27-ஆம் தேதி பூண்டி ஏரியில் 17.05 அடி தண்ணீர் இருந்தது. தற்போது கிருஷ்ணா நதி நீர் வரத்து அதிகரிப்பால் 10 நாட்களில் பூண்டி ஏரியில் 4 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை ஏரிக்கு 276 மில்லி யன் கனஅடி தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகி உள்ள வர்தா பயலால் ஆந்திர தென் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கண்டலேறு அணையின் நீரின் அளவு உயரவாய்ப்புள்ளதால் பூண்டிக்கு கூடுதல் நீர் கிடைக்க வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com