சனி, ஞாயிறு விடுமுறையால் இன்று வங்கிகளில் அவதிப்படும் பொதுமக்கள் கூட்டம்

வங்கிகளில் பணத் தட்டுப்பாட்டால் தொழிலாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் பணம் எடுக்க முடியாமல் அவதிப்படும் நிலை தொடர்கிறது.
சென்னை வண்ணாரப்பேட்டை இந்தியன் ஓவர்சிஸ் வங்கிக் கிளையில் பணம் எடுக்க செவ்வாய்க்கிழமை அலைமோதிய வாடிக்கையாளர்கள் கூட்டம்.
சென்னை வண்ணாரப்பேட்டை இந்தியன் ஓவர்சிஸ் வங்கிக் கிளையில் பணம் எடுக்க செவ்வாய்க்கிழமை அலைமோதிய வாடிக்கையாளர்கள் கூட்டம்.

சென்னை: வங்கிகளில் பணத் தட்டுப்பாட்டால் தொழிலாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் பணம் எடுக்க முடியாமல் அவதிப்படும் நிலை தொடர்கிறது. மேலும் நாளை முதல் சனி, ஞாயிறு விடுமுறை நாள்கள் என்பதால், இன்று வெள்ளிக்கிழமை காலை முதலே பணம் எடுக்க வங்கிகள் முன்பு கூட்டம் அலைமோதுகிறது.
 ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவ. 8-ஆம் தேதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, வங்கிகளில் பழைய நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து புதிய ரூ.2000, ரூ.500 நோட்டுகள் பெற்ற செல்ல வேண்டிய நிலையிருந்தது.
 இந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக பொதுமக்களுக்கு வங்கிகள் போதுமான அளவுக்கு பணம் விநியோகிக்க முடியாத அளவு கடும் தட்டுப்பாடு தொடர்ந்து வருகிறது. மேலும், பெரும்பாலான ஏ.டி.எம். மையங்களும் மூடியே கிடக்கின்றன.
 புதிய ரூ.2000 நோட்டுக்கும் சில்லறை கிடைப்பதில் சிரமம் உள்ளது. இதேபோல், வங்கிகளில் டெபாசிட் செய்த பணத்தையும் எடுக்க முடியாமல் பொதுமக்கள் நாள்தோறும் சிரமப்படுகின்றனர். அதிலும், கூட்டத்தை பொருத்து ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் அளவிலேயே வழங்கப்படுகிறது. வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் எடுக்கலாம் என மத்திய அரசு நிர்ணயித்திருந்தாலும் எடுக்க முடியாத நிலையிருக்கிறது.  
  இதற்கிடையே வங்கிகளுக்கு நாளை இரண்டாவது சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் இன்று வெள்ளிக்கிழமை வங்கிகளில் கூட்டம் அலைமோது வருகின்றன.
நேற்று வியாழக்கிழமை அன்றே வங்கிகளில் கூட்டம் குவிந்த காரணத்தால், சென்னையின் முக்கிய பகுதிகளில் உள்ள வங்கிக் கிளைகளில் பொதுமக்கள் அமர  வசதி செய்யப்பட்டன.     
எங்கள் வங்கிக் கிளையில் 100-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களும், பொதுமக்களும் கணக்கு வைத்துள்ளனர். இந்தக் கிளைக்கு நாள்தோறும் ரூ.50 லட்சம் தேவை, ஆனால் ரிசர்வ் வங்கி ரூ.30 லட்சமே வழங்குகிறது. அதனால், பொதுமக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரத்துக்குள் பிரித்து வழங்க வேண்டியுள்ளது. பல்வேறு செலவு செய்ய வேண்டியுள்ளதால், ரூ.24 ஆயிரம் வரையில் விநியோகிக்க வலியுறுத்துவதாக இந்தியன் வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com