திரையரங்குகளில் தேசியகீதம் பாடும் போது மாற்றுதிறனாளிகள் எழுந்து நிற்க தேவையில்லை: உச்சநீதிமன்றம்

திரையரங்குகளில் காட்சி தொடங்கும் முன் தேசியகீதம் இசைக்கப்படும் போது மாற்றுதிறனாளிகள் எழுந்து நிற்க தேவையில்லை
திரையரங்குகளில் தேசியகீதம் பாடும் போது மாற்றுதிறனாளிகள் எழுந்து நிற்க தேவையில்லை: உச்சநீதிமன்றம்

திரையரங்குகளில் காட்சி தொடங்கும் முன் தேசியகீதம் இசைக்கப்படும் போது மாற்றுதிறனாளிகள் எழுந்து நிற்க தேவையில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார். 

முன்னதாக நாடு முழுவதும் திரையரங்குகளில் ஒவ்வொரு காட்சி தொடங்கும் முன் தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும்; அப்போது, பார்வையாளர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும். தேசிய கீதம் இசைக்கப்படும் போது, திரையில் தேசியக் கொடியை காட்ட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில்  திரையரங்குகளில் தேசிய கீதம் ஒளிபரப்ப பிறப்பித்த உத்தரவில் தற்போது சில மாற்றங்களை அறிவித்துள்ளது உச்சநீதிமன்றம். தேசியகீதம் பாடும் போது மாற்றுதிறனாளிகள் எழுந்து நிற்க தேவையில்லை. கதவுகள் வெளிபுறத்தில் பூட்ட தேவையில்லை என்றும் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com