நடன அழகி மீது பணத்தை இறைத்து நடனமாடிய சமாஜ்வாடி எம்எல்ஏ

உத்தரப் பிரதேசத்தில் திருமண விழாவில் பங்கேற்ற சமாஜ்வாடி எம்எல்ஏ ஒருவர் அங்கு நடனமாடிய பெண்கள் மீது பணத்தை வாரி இறைத்து

பல்ராம்பூர்: உத்தரப் பிரதேசத்தில் திருமண விழாவில் பங்கேற்ற சமாஜ்வாடி எம்எல்ஏ ஒருவர் அங்கு நடனமாடிய பெண்கள் மீது பணத்தை வாரி இறைத்து அவர்களுடன் அநாகரீமாக நடனமாடிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.

உத்தரப் பிரதேச சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏ ஜகத்ராம் பஸ்வான். இவர் திருமணவிழா ஒன்றில் பங்கேற்றபோது, அங்கு பெண்கள் நடன கலை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.  அவர்களது நடன கலை நிகழ்ச்சியை கண்டு மகிழ்ந்த எம்எல்ஏ ஜகத்ராம் பஸ்வான், நடனமாடிய பெண்கள் மீது ரூபாய் நோட்டுக்களை வாரி இறைத்து தனது அநாகரீகமான நடனத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி இதுபோன்று அநாகரீகமான செயல்களில் ஈடுட்டது கண்டிக்கத்தக்கது. மேலும், சம்மந்தப்பட்ட எம்எல்ஏ பதவி விலக வேண்டும் என அனைத்து தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com